கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
வருஷநாடு : கண்டமனுார் வனச்சரகத்திற்கு உட்பட்ட கன்னிமார்கோவில் மலைப்பகுதியில் இருந்து நேற்று காலை தண்ணீர் தேடி ஒரு வயது பெண் புள்ளிமான், அருகில் உள்ள தோட்டப்பகுதிக்கு வந்தது. அங்குள்ள நாய்கள் விரட்டியதில் நிலை தடுமாறி தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்தது. மயிலாடும்பாறை தீயணைப்பு துறையினர் அங்கிருந்து புள்ளிமானை மீட்டு கண்டமனுார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மானுக்கு சிகிச்சை அளித்து மலைப்பகுதியில் விட்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!