Advertisement

குறைந்துவரும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்

தேவதானப்பட்டி : மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் வறட்சி நிலவுகிறது. நீர்வரத்து இல்லாததால் அணையின் நீர்மட்டம்நாளுக்கு நாள் குறைந்து 35.80 அடியாக உள்ளது. இதனால் பாசன விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள னர். தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடியாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வரட்டாறு, மூலாறு, தலையாறு ஆகிய பகுதியில் பெய்யும் மழைநீர் அணையில் தேங்குகிறது.

இதன் மூலம் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலை நாயக்கன்பட்டி, புல்லக்காபட்டி,சாத்தாகோவில்பட்டி, அட்டணம்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலக்குண்டு,கனவாய்ப்பட்டி, , குன்னுவராயன்கோட்டை, சிவஞானபுரம் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் அக்., 15 ல் முதல் போக நெல்சாகுபடிக்கு நீர் திறக்கப்படும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement