Advertisement

வார்னர், பின்ச் ஜோடிபுதிய உலக சாதனை

லார்ட்ஸ்: உலக கோப்பை வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு 5வது முறையாக, தொடர்ச்சியாக 50 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி வார்னர், பின்ச் ஜோடி உலக சாதனை படைத்துள்ளது.

உலக கோப்பை தொடர் 32வது லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், பின்ச் ஜோடிமுதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தனர். இது ஒரு புதிய உலக சாதனையாகும்.


5 முறை 50 ரன்னுக்கும் மேல்



அதாவது, உலக கோப்பை வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு 5 முறை தொடர்ச்சியாக 50 அல்லது அதற்கு மேல் இந்த ஜோடி சேர்த்திருக்கிறது. இதற்கு முன்னதாக, தொடர்ச்சியாக 50 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்த ஜோடிகள் பட்டியலில் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். வார்னர், ஆரோன் பின்ச் ஜோடிக்கு அடுத்ததாக கிராண்ட் பிளவர், கிறிஸ் தவாரே ஜோடி 1983ம் ஆண்டில் 4 முறை இதே சாதனையை படைத்திருக்கிறது. அதன்பின்னர், டேவிட் பூன், ஜெப் மார்ஷ் ஜோடி, அமிர் சொகைல், சையது அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன் ஜோடி 4 முறை இதே சாதனையை படைத்திருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement