Advertisement

மணல் திருட்டை தடுத்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்

வேடசந்துார் : நீர் நிலைகளில் மண் மற்றும் மணல் திருட்டை தடுத்து நிலத்தடி நீரை பாதுகாக்கவேண்டும் என, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக துணைத்தலைவர் பொம்முசாமி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

மனு விபரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் 393 ஏக்கர் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை பாதுகாத்திடும் மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறோம். வரும் காலங்களிலும் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஆறு, குளம், அனைப் பகுதிகளில் மணல் அள்ளுவதை முற்றிலுமாக தடுக்கவேண்டும். இல்லையெனில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிடும். தற்போது ஆயிரம் அடி போர்வெல் அமைத்தாலும் தண்ணீர் இல்லை. விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே மாவட்ட அளவில் ஏரி, குளங்களில் செம்மண், மணல் அள்ள தடைவிதிக்க வேண்டும். மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என கூறி உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement