Advertisement

காவிரி குடிநீர் திட்ட பணி தொழிலாளர்கள் தர்ணா

எரியோடு, : காவிரி குடிநீர் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் எரியோடு நீரேற்றும் நிலையம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 2005 முதல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பல பகுதிகளுக்கு நீர் சப்ளையாகிறது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இதற்காக பல இடங்களில் நீரேற்று நிலையங்கள், தரைமட்ட, உயர் மட்ட தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றை இயக்கிட துவக்கத்தில் பொறியாளர்களே ஊழியர்களை பணியில் சேர்த்து சம்பளம் வழங்கினர். தற்போது இப்பணிகள் ஒப்பந்தகாரர்களுக்கு டெண்டர் விடப்பட்டு 'அவுட் சோர்சிங்' முறையில் நடக்கிறது. துவக்க காலத்தில் இருந்து பணிபுரிந்த பல ஊழியர்கள் ஒன்றிணைந்து பணி நிரந்தரம் கோரி வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது. இந்நிலையில் தற்போது தரப்படும் பல்வேறு மறைமுக நெருக்கடிகள் குறித்து ஆலோசனை நடத்த தொழிலாளர்கள் 60 பேர் எரியோட்டில் ஒன்று கூடினர்.

நீரேற்று நிலையம் முன்பாக சிறிது நேரம் அமர்ந்து தர்ணா செய்து கலைந்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் காந்தி கூறுகையில், ''பராமரிப்புத் திட்ட மதிப்பீட்டின்படி 300 தொழிலாளர்கள் இருக்கவேண்டும். ஆனால் 150 தொழிலாளர்களே உள்ளதால் வேலைப்பளு அதிகம் உள்ளது. வாரியம் நிர்ணயித்த முழு சம்பளத்தொகையை வழங்க வேண்டும்' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement