Advertisement

கொடையில் மிதமான மழை

கொடைக்கானல் : கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.கடந்த இரு தினங்களாக மாலையில் பலத்த காற்று வீசியது. அவ்வப்போது வெயிலின் தாக்கம், மேகமூட்டம் என சீதோஷ்ண நிலை மாறுபட்டிருந்தது. குளு, குளு நகரில் அரை மணி நேரமும், வில்பட்டி, பூம்பாறை உள்பட மேல்மலை கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. கீழ்மலையில் பண்ணைக்காடு, வாழைகிரி, ஊத்து, பூலத்துார், கும்பறையூரில் ஒரு மணி நேரம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய மழை குறுவிவசாயம் மற்றும் மலைத்தோட்ட பயிர்களுக்கு ஏற்றதாக அமைந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement