Advertisement

விஷம் குடித்து தம்பதி தற்கொலை முயற்சி

நாகர்கோவில்:கந்துவட்டி கொடுமையால், நாகர்கோவில் அருகே, தற்கொலைக்கு முயன்ற தம்பதிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குமரி மாவட்டம், பறக்கை, சுவிசேஷபுரத்தைச் சேர்ந்தவர் சிம்சோன், 45; கொத்தனார். மனைவி ஜேசு ரோஸ்லெட், 40. தம்பதிக்கு, இரு மகன்கள் உள்ளனர். சிம்சோன், குடும்பத்துடன், நெல்லை மாவட்டம், பழவூரில் வசித்து வந்தார்.சிம்சோனுக்கு, 7 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதை திருப்பி செலுத்த முடியாமல், அவதிப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் இரவு, கணவன்- - மனைவி ஒரு அறையிலும், மகன்கள் இருவரும், வீட்டின் மற்றொரு அறையிலும் துாங்கினர். நள்ளிரவில் அலறல் கேட்டு, மகன்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், சிம்சோன் அறையின் கதவை உடைத்து பார்த்த போது, கட்டிலில், தம்பதி வாயில் நுரை தள்ளிய நிலையில், உயிருக்கு போராடியபடி கிடந்தனர். பக்கத்தில் ஒரு கடிதமும் இருந்தது.அதில், கடன் தொல்லையால், தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டு இருந்தது. இருவரையும் மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விசாரணையில், தம்பதி, வாழைப்பழத்தில் விஷம் வைத்து சாப்பிட்டது தெரிந்தது.சிம்சோனின் மகன் அளித்த புகாரின்படி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, நான்கு பேர் மீது, சுசீந்திரம் போலீசார், கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement