Advertisement

ரூ.97 கோடியில்மீன்பிடி துறைமுகம்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணத்தில், 97.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மீன் பிடிதுறைமுகத்தை, முதல்வர், இ.பி.எஸ்., 'வீடியோ கான்பரஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.
தேங்காப்பட்டணத்தில், துறைமுகம் அமைக்க, 2009ம் ஆண்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்புடன், 97.40 கோடி ரூபாய் செலவில், 10 ஆண்டுகளில், பணி முடிக்கப்பட்டது. 750 விசை படகுகளும், 300 பைபர் படகுகளும் நிறுத்த முடியும்.எல்லா பருவ காலங்களிலும், படகுகளை நிறுத்தி, தொழில் செய்யவும், சுகாதாரமான முறையில், மீன்களை பராமரிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று, இத்துறைமுகத்தை, முதல்வர், இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.தேங்காப்பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் பிராந்த் வடநேரே ஆகியோர் குத்து விளக்கேற்றி, இனிப்பு வழங்கினர்.இந்த துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், குமரி மாவட்ட மீனவர்கள், கேரளா போன்ற இடங்களுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்வது குறையும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement