Advertisement

நாமக்கல் கோழிக்குஞ்சு சிங்கம்புணரியில் விற்பனை

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கோழிக்குஞ்சுகள் விற்பனை ஜோராக நடக்கிறது. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் அருகே விற்பனை செய்யும் வியாபாரி கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் இருந்து போந்தா இன கோழிக்குஞ்சுகளை மொத்தமாக வாங்கி பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்கிறோம். இந்த கோழிக்குஞ்சுகள் ஜோடி 10 ரூபாய், 20 ரூபாய் என விற்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 குஞ்சுகள் வரை விற்பனை ஆகிறது. இவற்றை, பள்ளிச் சிறுவர்கள் ஆர்வமாக வாங்கிச்செல்வது மட்டும் இல்லாமல் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்காக வாங்கி வீடுகளில் வளர்க்கின்றனர்' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement