Advertisement

திருப்புவனத்தில் 'பறக்கும்' ஷேர் ஆட்டோக்கள்

திருப்புவனம் : திருப்புவனத்தில் கடந்த சில நாட்களாக ஷேர் ஆட்டோக்கள் வேகமாக செல்வதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர்.திருப்புவனத்தில் 100க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.

வாரச்சந்தை, நரிக்குடி ரோடு, கோட்டை பஸ் ஸ்டாப், புதுார் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் சுற்று வட்டார கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான ஷேர் ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக இயங்கி வருகின்றன. ஆட்டோ டிரைவர்கள் சிலர் போதையில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். பயணிகளை ஏற்றி இறக்குவதில் அடிக்கடி ஆட்டோ டிரைவர்கள் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபடுகின்றனர்.

திருப்புவனத்தில் வெளியூர் நபர்கள் பலரும் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். பயணிகளை ஏற்றுவதில் போட்டி போடுவது, தாறுமாறாக ஆட்டோக்களை இயக்குவது போன்ற செயல்களில் வெளியூர் நபர்கள்ஈடுபடுவதால் உள்ளுர் நபர்கள் பலரும் ஷேர் ஆட்டோ தொழிலை விட்டு ஒதுங்கி விட்டனர். அசுர வேகத்தில் வாகனங்களைஇயக்குவதால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் அசுரவேகத்தில் சென்ற ஆட்டோ 108 வாகனத்தின் மீது மோதியதில் அதன் டிரைவர் பலத்த காயமடைந்தார். போலீசார் ஷேர் ஆட்டோக்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement