Advertisement

'தமாஷா பேசிட்டே இருக்காரே!'

'தமாஷா பேசிட்டே இருக்காரே!'

கூட்டுறவு சங்கங்கள் நடத்தும், பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளின் செயல்பாடு குறித்து, சென்னை, அண்ணாநகரில் உள்ள, சிந்தாமணி கடையில், கூட்டுறவுத் துறை அமைச்சர், ராஜு, சமீபத்தில் ஆய்வு செய்தார்.அப்போது அவர், 'அமைந்தகரை, சைதாப்பேட்டை என, பல பகுதிகளில் இருந்தும், மக்கள் இங்கு வந்து, காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். இதற்கு, காய்கறி விலை குறைவாகவும், தரமாகவும் இருப்பது தான் காரணம்' என்றார்.இதைக் கேட்ட, முதியவர் ஒருவர், 'அண்ணா நகர் எங்கே இருக்கு... சைதாப்பேட்டை எங்கே இருக்கு... 1 கிலோ தக்காளி, வெங்காயம் வாங்கவா, பஸ்சில் வந்து செல்ல, இரண்டு மணி நேரம், மக்கள் செலவிடுறாங்களா... 'தெர்மாகோல்' திட்டத்தை நினைவுபடுத்துறா மாதிரி, தினமும் ஏதாவது தமாஷா பேசிட்டே இருக்காரே பா... கொசுத்தொல்லை தாங்கலே...' என்றபடி, நடையைக் கட்டினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    இந்தாளு சொல்ற இடங்களிலே MIG ண்ட LIG மக்களே அதிகம் மூனுளே ரெண்டு பங்கு ஒருபங்கு வித் க்கள் (கார்லெபோறவங்க) மற்றவர்கள் பல வீட்டுவாசல்லே வரகாய்கனிகள் அண்ட் மீன்கள் கூட வாங்கிண்டு குடும்பம் நடத்துறவங்களே அதிகம் அதேபோல தான் திருவல்லிக்கேணி மயிலாப்பூர் லே ல்லாம் மக்கள் தண்ணீர்தரமார்க்கெட் கங்னமண்டபம்கிட்ட விற்கும் மார்கெட்லே காய்கள்வங்கிடுவா நான் வெஜ் திண்றவா ஜாம்பஜார்மார்க்கெட்லே போவா. வரும் அசெம்பிளி தேர்தல்லே நோ அதிமுக என்பது உறுதி ஏறின விலைவாசியும் ஜனத்தொகையும் என்னிக்கு இறங்கிருக்கு

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஒரு வேளை ஓசிப் பெட்ரோலில் ஓடும் காரை எடுத்துவந்து இவருடைய ட்ரைவர் கொத்தமல்லி பச்சை மிளகாய் வாங்கக்கூட இங்கு மட்டும் என்ன, காய்கறி விளையும் ஊர்களுக்கே கூடப் போவாராயிருக்கும். மொத்தத்தில் 'பேத்தல் மன்னன்' 'உளறல் சக்ரவர்த்தி' இதில் எந்த விருது கொடுக்கலாம் என்று வாசகர்களே முடிவெடுக்கட்டும்

Advertisement