Advertisement

எம்.பி.,க்களே யோகா செய்யுங்க., இல்லைன்னா., பாபா சாபம்

மும்பை: எம்.பி.,க்கள் ,எம்எல்ஏ.,க்கள் , மத்திய மாநில அமைச்சர்கள் என அனைவரும் யோகா செய்ய வேண்டும் , இது அவர்களுக்கு கடவுள் அருள் கிடைக்கும், புறக்கணித்தால் ஒன்றும் கிட்டாது என யோகாகுரு பாபா ராம்தேவ் கூறினார்.

நாளை ( ஜூன் 21 ம் தேதி ) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் யோகா பயிற்சியில் மக்கள் பங்கேற்க உள்ளனர். மகாராஷ்ட்டிராவில் நடந்த யோகா தினத்தில் பங்கேற்ற யோகாகுரு பாபா ராம்தேவ் நிருபர்களிடம் பேசுகையில்;

நேரு, இந்திரா யோகாயோகா தினம் மிக சிறப்பானது. இந்நாளில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ,எம்எல்ஏ.,க்கள் உள்ளிட்டோரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென அவர்கள் சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது யோகாவுக்கென எதுவும் செய்யவில்லை. நேரு, இந்திரா யோகா பயிற்சியை ரகசியமாக செய்தனர். அதன் பின் வழி வந்த நேரு குடும்பத்தினர் யோகாவை புறக்கணித்தனர். இதனால் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்தனர்.


யோகா முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள் (பிரதமர் மோடியை மறைமுகமாக கூறினார்) கடவுளால் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். இல்லாது போனால் எதிர்மறை தான் கை கூடும். எதுவும் கிட்டாது. இந்தியாவிலேயே மக்களோடு மக்களாக யோகா செய்த ஒரே பிரதமர் மோடி தான் . அனைவரும் தவறாமல் யோகா செய்யுங்கள். இவ்வாறு பாபா கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  மக்களுக்கு குடி நீரில்லை விவசாயிகளுக்கு தண்ணீரில்லை மீனவர்கள் பிழைக்க வழியில்லாமல் திண்டாடுகின்றார்கள் மக்களின் திண்டாட்டம் இப்படியிருக்கும் போது இதையெல்லாம் யார் சரிச் செய்வது. இந்தியாவின் ஆறாவதுப் பெரிய நகரமான சென்னையில் இப்போது குடி நீர்ப் பஞ்சம் கேட்கவே வேதனையாகவுள்ளது. இமய மலை நாளுக்கு நாள் கரைந்து கொண்டிருக்கின்றது. முதலில் மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் மற்றதெல்லாம் சரியாக இயங்கும் (Let's face reality)

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இங்கே ஒருவர் மழித்தலும், நீட்டலும் என்ற குரளை குறிப்பிட்டு உள்ளார். அதே குரள், புலால் மறுத்தல் கள் உண்ணாமை ஆகிய நற்பண்புகளையும் கூறுகிறது. அதையும் நாம் கடைப்பிடித்தால் நல்லது. வாழும் வள்ளுவர் என்று கூறிக்கொண்டவர்களும் மதுஅருந்தி புலால்தின்ன.......

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  யோகா தினத்தன்று ஒருநாள் மட்டும் யோகா செய்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கவேண்டும் .. அவ்வளவுதானே .. செய்துட்டா போச்சு .. நான் ரெடி

 • bugindia - ,

  சோப்பு நல்ல பலன் தருகிறது அய்யா!.. வெறும் விளம்பரம்.

 • Uthiran - chennai,இந்தியா

  அவர் சாபமெல்லாம் இடவில்லை உண்மையைத்தான் சொல்கிறார். யோகா மற்றும் பிராணாயாமம் செய்தால், உடல் ஆரோக்கியத்துடன், புத்தி கூர்மையாக இருக்கும் மனோ பலம் நிறையவே இருக்கும். புத்தி கூர்மையாக இருந்தால் செய்யும் வேலையும் தெளிவாக, நறுவிசாக இருக்கும் - சுறுசுறுப்பாக இருப்பார்கள் ஆனால் பரபரக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தை கொண்டு மருத்துவமனையில் கொட்டி அழ மாட்டார்கள். இதையெல்லாம் விட மன அழுத்தம் வந்து தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்.

Advertisement