Advertisement

கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா

கம்பம் : நாராயணத்தேவன்பட்டி அருகில் உள்ள கேசவபுரம் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக வருவாய்த்துறை அறிக்கை தந்து ஓராண்டாகியும் அகற்றப்படவில்லை.

சுருளி அருவிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் நாராயணத்தேவன்பட்டி அருகில் உள்ளது கேசவபுரம் கண்மாய். 165 ஏக்கர் பரப்பில் பரந்துவிரிந்து நுாற்றுக்கணக்கான கிணறுகள் நிலத்தடி நீர்மட் டம் உயர்வதற்கு வழிவகை செய்யும் இந்த கண்மாயின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இங்கிருந்த மரங்களை வெட்டி கடத்தப்பட்டது. இக்கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். பொதுப்பணித்துறையின் மஞ்சளாறு டிவிஷன் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், அதன் அலுவலகம் தேனியில் உள்ளதாலும் அவர்கள் இந்த கண்மாயை கண்டுகொள்வதேயில்லை என்ற புகார் உள்ளது. குப்பைக் கிடங்காகவும் மாற்றத் துவங்கியுள்ளனர்.'சர்வே' : இந்நிலையில் கடந்தாண்டு மே மாதம் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, கேசவபுரம் கண்மாயை அளந்து, ஆக்கிரமிப்பு தொடர்பாக அறிக்கை கேட்டார். அதன்படி அப்போது தாசில்தார் பாலசண்முகம் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் நிலஅளவையர்கள் கண்மாயை அளந்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்தனர். இதுதொடர்பான விரிவான அறிக்கை மாவட்ட வருவாய் அலுவலருக்கு தரப்பட்டது. அதுகுறித்த விபரம் பொதுப்பணித்துறையினருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை. பாசன விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement