Advertisement

பெரியகாட்டுக்குறிச்சியில் அபாயம்; இடியும் நிலையில் நீர்தேக்க தொட்டி

காரைக்குடி,: காரைக்குடி அருகே சாக்கவயல் ஊராட்சி பெரியகாட்டுக்குறிச்சியில் சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழும் முன் புதிய நீர்தேக்க தொட்டி கட்டி தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாக்கோட்டை ஒன்றியம் சாக்கவயல் ஊராட்சிக்குட்பட்ட பெரியகாட்டுக்குறிச்சியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி 1980ல் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த தொட்டியின் துாண்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பெரிய மற்றும் சின்ன காட்டுக்குறிச்சியில் 50 குடும்பங்கள் வசிக்கின்றனர். குடிநீர் தேவைக்காக இந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து வரும் நீரைத்தான் பயன்படுத்துகின்றனர். காலை மாலை ஒரு மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. 30 வருடங்களுக்கு மேல் ஆனதால் சிறிய பராமரிப்பு வேலைகள் செய்யப்பட்டிருந்தாலும் தற்போது மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் துாண்கள் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.துரை, பெரிய காட்டுக்குறிச்சி: இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி தண்ணீரைத் தான் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். தொட்டி சேதமடைந்துள்ளதால் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் ஏற்றினால் இடிந்து விழும் சூழ்நிலை இருப்பதால் பாதி அளவு தண்ணீர் மட்டுமே ஏற்றப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. சாக்கவயல் ஊராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தொட்டி இடிந்து விழும் முன் புது மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement