Advertisement

மா.கம்யூ., தலைவர் மகன் மீது பாலியல் வழக்கு

திருவனந்தபுரம் : மா.கம்யூ., கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மாநில செயலாளருமான கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் மீது மகாராஷ்டிராவில், பாலியல் பலாத்காரம் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பார் டான்ஸர் :



கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினாய். இவர் மீது மும்பையை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், இந்த புகாரை அளித்துள்ளார். தான் துபாயில் பார் டான்ஸராக இருந்தபோது, பினாய் தனக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டதாகவும் மும்பை ஓஷிவாரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கண்ணுாரில் பினாய் புகார் :



ஆனால், பினாய் கொடியேறி கூறுகையில், ''தான் ஏற்கனவே அந்த பெண் தன்னை மிரட்டுவதாக, கண்ணுார் ஐ.ஜி.,யிடம் புகார்த் அளித்துள்ளதாகவும், அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை,'' என்றும் கூறியுள்ளார். விரைவில் கண்ணுார் போலீசார் அப்பெண் மீது வழக்கு பதிவு செய்வார்கள் என்று கேரளா போலீசார் கூறகின்றனர்.

ஒதுங்கும் கட்சி :



இந்த நிலையில், இப்பிரச்னையில் தலையிடாமல் இருப்பது என்று ஏற்கனே மா.கம்யூ., கட்சி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, பினாய் கொடியேறி மீது நிதிமுறைகேடுகள் குறித்த புகார்கள் எழுந்தபோதே, பினாய் பிரச்னைகளில் தலையிடாது ஒதுங்கி இருப்பதென முடிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இப்பிரச்னை கேரள அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியிருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

    இது ஒரு வர்க்க போராட்டத்தில் ஆதிக்க சக்திகளின் துணையோடு நடத்தப்படும் ஒரு தாக்குதல் . பழமையை விரும்பும் சனாதனிகளின் திட்டமிட்ட சதி . [ இப்படித்தான் இந்த உண்டியல் குலுக்கிகள் தொலை காட்சி விவாதங்களின் பொது வெட்டி பேச்சு பேசி நம் நேரத்தை நாசமாக்குவார்கள் . இந்த விஷயம் தொலை காட்சிகள் நிச்சயம் இருட்டு அடிப்பு செய்யும் . ஏதாவது ஒரு தொலை காட்சி விவாதம் நடத்தினால் மேற்கண்டபடி தான் மதசார்பற்ற காம்மிகள் பேசுவார் . நாட்டில் துடைத்து எறியப்பட்ட கம்மிகள் எப்போது தொலை காட்சிகளில் இருந்து துடைத்து எறிப்படுவார்களோ

  • sridhar - Chennai,இந்தியா

    பினாய் , பினராய் ரெண்டு பேரையும் பின்னி எடுக்கணும்.

  • konanki - Chennai,இந்தியா

    இந்த விவகாரத்தில் மா கம்யூனிஸ்ட், மற்றும் பிற. கட்சிகளை சேர்ந்த விவாதம் தமிழ் செய்தி சேனல்களில் நடக்குமா?

  • RajanRajan - kerala,இந்தியா

    ஈ சேட்டனை வேகம் நாட்டிலிருன்னு ஒழிவாக்கண்ணும். .ஒருபாடு காம்ப்ளியின்ட்களானு. நாடுகளுக்கு இவன் ஆவசியமில்லா. பொய்க்கோ வேற பணிக்கு.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    கேரளா போலீசார் மார்க்சிஸ்டுகளின் கையில். என்ன வேண்டுமானாலும் செய்வர். பாதர் முல்லைக்கல் மீது பாலியல் புகார் வந்தபோது மார்க்சிஸ்டுகளின் அழுத்தத்தால் கேரளா போலீஸ் வழக்கு பதியாமல் இழுத்தடித்தது நினைவிருக்கும்.

Advertisement