Advertisement

2030 முதல் மின்சார கார்கள் மட்டும் விற்பனை

புதுடில்லி: 2030க்கு பிறகு மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், இதற்கான திட்டங்களை உருவாக்க பல்வேறு அமைச்சகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிடி ஆயோக் அமைப்பு, அமைச்சரவைக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையில், 2030க்குள் பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்கள் விற்பனையை தடை செய்வதற்கான கொள்கைகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உருவாக்க வேண்டும்.
இது குறித்து அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும். மத்திய அரசு, அமைப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பயன்படுத்தப்படும். பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களை, மின்சாரத்தில் இயங்கும் கார்களாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2030க்குள் 50 ஜிகாவாட் ஹவர் பேட்டரிகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.


மின்சார வாகனங்கள் விற்பனை மூலம், எரிபொருள் இறக்குமதிக்கு ஆகும் செலவில் ரூ.3 லட்சம் கோடி அரசுக்கு மிச்சமாகும். இந்த வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். என நிடி ஆயோக் அமைப்பு கணித்துள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்க, முதலாண்டில் வரிச்சலுகை அளிக்கலாம் எனவும் கூறியுள்ளது.இதற்கு முன்பு, மின்சார வாகனங்கள் உற்பத்தியில் ஜப்பான் மற்றும் தென் கொரியா, முன்னணியில் உள்ளதால், இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அப்போது, 2030க்குள் மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் கட்காரி கூறியிருந்தார். தற்போது, இந்த திட்டம் குறித்து அனைவருடனும் ஆலோசனை நடத்தப்படும் எனக்கூறியுள்ளார்.


இதற்கு முன்னர் நிடி ஆயோக்கின் சிஇஓ அமிதாப் காந்த் அளித்த அறிக்கை ஒன்றில், 2025 முதல், 150சிசி இன்ஜின் திறன் கொண்ட, மின்சாரத்தில் இயங்கும் மூன்று மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • அடங்குல - madurai,இந்தியா

  ஏற்கனவே பல பேர் மின்கலம் ஊர்திய செய்ய கெளம்பியாச்சு, அதுல இந்திய நிறுவனங்களும் இருக்கு. அடுத்து சூரிய மின் தேக்கிகளை பத்தி யோசிக்கணும். இந்தியால இந்த தொழில்நுட்பத்த செயல்படுத்தினா அதிக பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  சீமான் அண்ணன் மாட்டு வண்டீலத்தான் எல்லாத் தமிழனும் போவணும்னு சொல்லிக்கிட்டிருக்காரு. அப்ப மின்சாரமும் தேவையில்லைங்கதானே? வேலு நாச்சியாரு காலத்துல யாரும் காரு வச்சிக்கிடல ஆமா.

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  சுடலை ஆட்சிக்கு வந்தால் ஒரு காரும் காரும் ஓடாது

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  Modi has to take a harsh decision now to stop producing and selling Petrol Diesel vehicles from 2020 January. All these vehicle manufacturers must equip themselves to start producing Battery vehicles from Jan 2020. Year 2030 is a long way to go and by this time people must know how to live by inhaling carbon monoxide. Already this action is delayed and Country like Singapore had stopped petrol diesel buses six years ago and discouraged people from buying cars and two wheelers long time ago by giving the facility of Public transport tems.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  நல்ல திட்டம். விலையைக் கட்டுப்படுத்த இப்போதே ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். இதனால் ஏற்றுமதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடுகளில் விலை அதிகமாக உள்ளது. பேட்டரி யில் கரண்ட் இல்லாத சமயத்தில் பெட்ரோலில் ஓடும். ஓடும்போது பேட்டரி சார்ஜை ஏற்றிக்கொள்ளும் ஹிப்பிரிட் வாகனம் விலை ஓரளவு குறைவாக உள்ளது. ஆனால் பெட்ரோல் அதிகம் குடிக்கும் வேகம் எடுக்காது. டவுனுக்குள் பயணக்க தகுந்தது.

Advertisement