Advertisement

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : 12 பேர் பலி

பீஜிங் : சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கள் கிழமை) இரவு 10.55 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.


2-வது நிலநடுக்கம் இன்று காலை மீண்டும் ஏற்பட்டது. நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. 2-வது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.


அடுத்தடுத்த இரு நிலநடுக்கங்களால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்தனர். உயரமான கட்டடங்களில் இருந்த மக்கள் கட்டடம் குலுங்கியதை அடுத்து, அலறியடித்தபடி வீதிகளுக்கு வந்தனர். சுமார் ஒரு நிமிடம் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நீடித்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.


நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 12பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 140 பேர் காயம் அடைந்தனர். அண்டை மாநிலமான யேனான் மாகாணத்திலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர முடிந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    அங்கேயும் நிலத்தடி நீர், மண் எல்லாத்தையும் தோண்டி மேலே ஊடு கட்டிட்டாங்களோ என்னவோ? இந்தியாவுலேயாவது எதிர்க்கட்சிகள் கூப்பாடு போடும். சீனாவுல?

Advertisement