Advertisement

நீர் மேலாண்மை: அரசுக்கு ஐகோர்ட் குட்டு

சென்னை: தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நீர் மேலான்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் பிரச்னை குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கண்டனம். ஏரிகளை துார் வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கை என்ன?. இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
மழை நீர் கடலில் வீணாக கடலில் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. நீர் வற்றுவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வால் என்ன பலன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய ஐகோர்ட் நீதிபதிகள், அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

நீர்மேலாண்மை குறித்த அரசாணைகளை சமர்ப்பிக்க வேண்டும். சென்னைக்கு குடிநீர் வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தண்ணீர் பிரச்னை குறித்து எடுக்கப்பட்ட நவவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அரசு சார்பில், 'கடல் நீரை குடிநீராக்கும் 3வது யூனிட் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும், அது வந்தால் சென்னையின் குடிநீர் பிரச்னை தீரும் என்றும், தமிழகத்தில் குடிநீர் வழங்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னதாக பதிலளிக்கப்பட்டது, அதன் பின்னரே நீதிபதிகள் அரசை நோக்கி சரமாரியான கேள்விகளை தொடுத்து கண்டித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (47)

  • G.Kirubakaran - Doha,கத்தார்

    இந்தியாவிலே மிக மோசமான நீர் நிர்வாகம் ,தமிழ்நாடு .பொதுமக்களின் துயரம் கொஞ்சம் கூட தெரியாது. அமைச்சர்களின் அறிக்கை அதை விட மோசம் . சுருக்கமாக சொன்னால் அணைத்து ஏறி,குளம் தூர் வாரினால் போதும்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    எங்களுக்கா அறிக்கை தயார் பண்ண தெரியாது? மிஞ்சி, மிஞ்சி போனால் இன்னொரு குட்டு விழப்போகுது. /// நீர்மேலாண்மை குறித்த அரசாணைகளை சமர்ப்பிக்க வேண்டும். சென்னைக்கு குடிநீர் வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தண்ணீர் பிரச்னை குறித்து எடுக்கப்பட்ட நவவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். ///

  • K.P SARATHI - chennai,இந்தியா

    காவேரியில் 3 லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலந்தது அதை சேமித்த இருத்தால் இந்த நிலை கிடையாது அப்போது நீதிமன்றம், மீடியா, மற்றும் எந்த கட்சியும் இதை கண்டுகொள்ளவில்லை. நீதி மன்றங்கள் செய்தியை படிக்கலாமல் பொது நல வழக்கு தொடர்ந்தால் மட்டும் நடவடிக்கை இது தவறு

  • Sivak - Chennai,இந்தியா

    மாநிலத்தில் நீர் மேலாண்மையில்லாமல் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிபட்டால் மாநில அரசுகளை கலைக்கலாம் என அரசியல் சாசனத்தில் கொண்டு வாருங்கள் .... சட்டம் ஒழுங்கு கெட்டு மக்கள் அவதி படுவதை விட தண்ணீர் இல்லாமல் அவதி படுவது மிக கொடுமை ....

  • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

    அரசு செய்தத் தவறினால் தண்ணீரில்லாமல் இன்று மக்கள் அல்லல் பட்டுக் கொண்டு தவிக்கின்றனர் நீதிமன்றமே இதை உறுதிச் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேல் தங்களின் கடமைகளை செய்யத் தவறியதற்கு அரசு விதிமுறைகளின் படி ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் மக்களுக்கு ஊழலற்ற அரசு வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் ஆட்சியாளர்கள் ஊழலற்றவர்களாகயிருக்கவேண்டும் இதை இனிமேல் மக்கள்தான் உறுதிச் செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு விடுவுக் காலம் பிறக்கும். தமிழகமும். உயரும்.

Advertisement