Advertisement

பிரசாந்த் கிஷோருடன் முதல்வர் ரகசிய சந்திப்பு

புதுடில்லி: டில்லி சென்றிருந்த முதல்வர் பழனிசாமி, அங்கு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது.

பழனிசாமி முதல்வராக இருந்தாலும், அ.தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சித்து வருகிறார். அதற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக உள்ளார். இருவருக்கும் இடையே, கட்சி தலைமைப் பதவியை கைப்பற்றுவதில், கடும் போட்டி உள்ளது. இந்த சூழலில், நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லி சென்ற முதல்வர், அங்கு பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற, அரசியல் கட்சிகளுக்கு, வியூகங்கள் அமைத்து கொடுப்பதில், பிரசாந்த் கிஷோர் நிபுணத்துவம் பெற்றவர்.


இவர், 2014 லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடிக்கு, வெற்றிக்கான வியூகம் வகுத்து கொடுத்தார். அந்த தேர்தலில், மோடி வெற்றி பெற்றார். அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக, அவர், 'ஐபெக்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். சமீபத்தில், ஆந்திரா சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆலோசனைகள் வழங்கினார். அவர் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளார். அடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், கிஷோரை அழைத்து பேசி உள்ளார்.


இந்த சூழ்நிலையில், பழனிசாமியும், டில்லியில், அவரை சந்தித்து பேசி உள்ளார். அப்போது, அ.தி.மு.க., தலைமை பதவியை பெறுவதற்கும், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் ஆவதற்கும், தேவையான வியூகம் வகுத்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கான ஒப்பந்தம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. பிரசாந்த் கிஷோருடனான சந்திப்புக்கு, அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., ரபி பெர்னார்ட் ஏற்பாடு செய்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா

  கிங்கே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. நீங்கள் டெல்லில் பொய் ஓய்வு எடுங்கள். மக்களைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை?

 • SUBRAMANIAN P - chennai,இந்தியா

  நீங்க திருந்த மாட்டீங்களா.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  1) பிரசாந்த் கிஷோர் பெரிய பூஜ்யம், முதல் தடவை அவர் சொல்படி நடந்தது என்ற ஒரு ஊகத்தின் மூலம் அவரை கூப்பிடுகிறார்கள் அதற்கு பிறகு இது வரை அவர் சொன்ன மாதிரி எதுவும் நடக்கவில்லை , அதாவது அவரது ஆலோசனை பிரகாரம் நடந்தவர்கள் இது வரை வெற்றி பெறவில்லை முதல் தடவைக்குப் பிறகு. 2) 1967 க்கு பிறகு டாஸ்மாக்கினாடு/திராவிட நாடு ஆன பின் அந்த மக்களுக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்று தான் "பணம்" அதிகம் கொடுத்தால் அவர்களுக்கு தான் வோட்டு என்பதே அவர்கள் மனதில் நிலை கொண்ட ஒரே தாரக மந்திரம். வேட்பாளர் ஆணா, பெண்ணா ,முடமா , கிழமா , கூன் , குருடா , செவிடா, இந்துவா , முஸ்லிமா , கிறித்துவனா , நல்ல அரசு தருவானா??? சன சேவை செய்வானா????என்பதை பற்றி அவர்கள் சிந்தனை செய்வதேயில்லை .

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பிரசாந்த் கிஷோர் எல்லாம் புள்ளி விவரங்கள் என்று சிலவற்றை வைத்து ஆலோசனை சொல்வர் , தமிழ் நாட்டிற்கு அதெல்லாம் அவசியமே இல்லை. சர்ச் , ஜமாத் தான் இந்த நாட்டில் பலமான அமைப்புகள் , அவர்கள் சொல்லும் நபர் தான் ஜெயிக்க முடியும். இந்துக்கள் ஓட்டு நாலாபுறமும் சிதறும் , இவர்களின் ஓட்டு எந்த கட்சிக்கு விழுகிறதோ அவர்கள் தான் ஜெயிப்பார்கள் , அதற்காக சர்ச் , ஜாமத்தில் தீர்மானம் போடப்படுகிறது.

 • Shekar Raghavan - muscat,ஓமன்

  வைட்டமின் ம் மட்டும் போதும், அடிமைகள் வாங்க வியூகம் தேவை இல்லை ... வாய் நிறைய பொய் பை நிறைய காசு இதுதாண்டா தமிழகம் வேணா கூட குஆர்டெர் + கோழி பிரியாணி ஆட்டம் கொண்டாட்டம்

Advertisement