Advertisement

தப்பி ஓடல; டாக்டரை பார்க்க வந்தேன்; மெஹுல் சோக்சியின் 'அடடே' விளக்கம்

மும்பை: 'நான் இந்தியாவைவிட்டு தப்பி ஓடவில்லை. மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவே மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவா சென்றுள்ளேன். வேண்டுமானால், இங்கு என்னிடம் விசாரணை நடத்தலாம்' என, வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, வைர வியாபாரி, மெஹுல் சோக்சி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வந்த வைர வியாபாரிகளான, நிரவ் மோடி மற்றும் அவருடைய உறவினரான, மெஹுல் சோக்சி, 13,600 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் கூறியது. இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.


நிரவ் மோடி, ஐரோப்பிய நாடான, பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி வருவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அவருடைய உறவினரான, மெஹுல் சோக்சி, மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், சோக்சி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.


அதில் அவர் கூறியுள்ளதாவது: நான் வழக்குகளுக்கு பயந்து, நாட்டை விட்டு ஓடவில்லை. சில குறிப்பிட்ட நோய்களால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளேன். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக தான், இங்கு வந்துள்ளேன். சிகிச்சை முடிந்து, உடல்நலம் தேறியவுடன், நாடு திரும்புவேன். இந்த வழக்குகள் தொடர்பாக என்னிடம் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நினைத்தால், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை இங்கு வரலாம். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அங்கெல்லாம் போவேனாம்.... (அதுவேற, தொத்திக்கப்போவுது.)

  • Darmavan - Chennai,இந்தியா

    கோர்ட் கண்டிப்புடனிருந்து இங்கு வந்து இந்தியா டாக்டர்கள் பரிசோதிக்க சொல்ல வேண்டும்..எல்லாவற்றுக்கும் காரணம் கோர்ட்டின் கரிசனம்தான்/ கடுமை இல்லாததுதான் ,

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    டாக்டரை பார்க்க வந்தேன்????சென்றேன் என்று இருக்கவேண்டும். வந்தேன் என்றால் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும்.

  • Yezdi K Damo - Chennai,இந்தியா

    இவனெய்எல்லாம் பண்டைய கால முறைப்படி கழுமரத்தில் ஏற்றி கொல்ல வேண்டும்

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    தப்பி ஓடவில்லையென்றால் திரும்பி வரவேண்டியதுதானே? ஏன் அங்கே இருந்து கொண்டு, தேவைப்பட்டால், இங்குவந்து விசாரணை செய்துகொள்ளுங்கள் என்று கூறுகிறாய்? அதிலிருந்தே தெரிகிறது நீ எப்படிப்பட்ட தில்லாலங்கடி என்று

Advertisement