Advertisement

ராகுலை தோற்கடித்த ஸ்மிருதிக்கு பலத்த வரவேற்பு

புதுடில்லி: அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானி, எம்.பி.,யாக பதவியேற்க வந்த போது பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சரான, ஸ்மிருதி இரானி, எம்.பி.,யாக பதவியேற்க வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர், அமித் ஷா உட்பட, பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், மேஜையை கைகளால் தட்டி வரவேற்பு அளித்தனர்.


உத்தர பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில், காங்., தலைவர் ராகுலை, 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், ஸ்மிருதி இரானி வென்றார். அதனால் அவருக்கு, பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதும், தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு வணக்கம் தெரிவித்த ஸ்மிருதி, நேரடியாக, சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து, வாழ்த்துகளை பரிமாறி கொண்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (42)

  • Viswam - Mumbai,இந்தியா

    தான் போன தடவை தோற்ற அமேதி தொகுதிக்கு முடிந்த வரைக்கும் இயன்றதை செய்து காங்கிரஸ் மற்றும் ராகுலின் பிதற்றல்களுக்கு பதிலடி அவ்வப்போது கொடுத்து, பிறகு தொகுதி மாறாமல் அதே தொகுதியிலிருந்து ராகுலை விரட்டியடித்து ஜெயித்த ஸ்ம்ருதி இரானி ஒரு ஜெயண்ட் கில்லர் என்பதில் சந்தேகமில்லை. இந்த தடவை கூடுதல் பொறுப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையும் இராணியிடம் பிஜேபி வழங்கியுள்ளது. இந்த தடவை அனாவசிய சர்ச்சைகளில் சிக்காமல் நன்றாக கடமை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    இந்த மேஜை தட்டும் சத்தம் கேட்டு ரவுல் வின்சி , இதனால் தான் தான் தோற்று விட்ட வெறுப்பில் அவளிடம் ,அவசர அவசரமாக பதவிப்பிரமாணம் எடுத்த பின் கையெழுத்து கூட போடாமே ஓடிப்போயிருச்சி????

  • அருண்நம்பி - Chennai,இந்தியா

    வருக வருக, வெற்றித்திருமகளே வருக, மானுட சேவை புரிக...

  • Rohin - jk ,இந்தியா

    மணி ஐயோ.... ஐயோ.. இனிமே இதையே சொல்லிக்கிட்டு திருஞ்சிங்கனா மக்கள் உங்களப் பாத்து என்ன நினைபாங்கனா... .................................

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    அடுத்து ராய் பரேலி தொகுதியில் ஒரு திறமையான வேட்பாளரை பிஜேபி இப்போதே களமிறக்க வேண்டும் , அடுத்த தேர்தலில் இவர்கள் உபியில் இருந்து துடைத்து எறியப்படவேண்டும்.

Advertisement