Advertisement

இது தகுமோ? தினமும் வீணாகும் குடிநீர்

திருப்பூர்:அவிநாசி ரோட்டில் குழாய் உடைப்பால் ரோட்டில் குடிநீர் வீணாகிறது. நீண்ட நாளாக இதை சரி செய்யாமல் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்கள் நோக்கிப் பயணமாகி வருகின்றனர்.
ஓட்டல்கள், விடுதிகள் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டு வரும் நிலையும், ஐ.டி., நிறுவனங்கள் ஒர்க் பிரம் ேஹாம் என்ற பெயரில், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் நடைமுறையையும் அதிகளவில் செயல்படுத்தி வருகின்றன.மோசமான அளவு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல், ஓரளவு சில பகுதிகள் உள்ள குடிநீர் ஆதாரங்களைக் கொண்டு சமாளித்து வருகின்றன. திருப்பூர் மாநகராட்சி பகுதியில், ஓரளவு குடிநீர் பிரச்னையில்லாத நிலை காணப்படுகிறது. அதே சமயம், குழாய் உடைப்புகளால் சில இடங்களில் குடிநீர் வீணாகி வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.அவ்வகையில், மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து திருப்பூருக்கு குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தினமும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாக ரோட்டிலும், சாக்கடை கால்வாயிலும் சென்று கலப்பது வாடிக்கையாக இருந்தது. கடந்த இரு மாதம் முன்னர், நீரேற்று மையத்தில் சப்ளை நிறுத்தப்பட்டு, இது போன்ற குழாய் உடைப்புகள் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம் புதுார், கருப்பராயன் கோவில் அருகே ஏற்பட்ட குழாய் உடைப்பு அப்போது சரி செய்யப்பட்டது.
அதன்பின் சில நாட்களில் அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் குடிநீர் பெருமளவு ரோட்டில் பாய்ந்து, சாக்கடையில் கலக்கும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது.இது குறித்து அப்பகுதியினர் மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும் பல நாட்களாக இது சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குடிநீருக்காக பல பகுதிகளில் மக்கள் அல்லல்படும் நிலையில், இது போல் குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ருத்ரா -

    குடிநீர் பிரச்னை இது போன்ற அலட்சியத்தாலும் வருகிறது. அதே போல் மழை அதிகம் காவிரிநீர் வரும்போது அதிகமாக கடலில் கலப்பதையும் தடுக்கலாம். மக்களின் கண்ணீரை பார்க்கும் போது தண்ணீரில் அதிக கனம் செலுத்தலாம்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அலட்சிய அதிகாரிகளும் பணியாளர்களும் இருக்கும் நாட்டில் இது சகஜமே அவர்களை ஒட்டு மொத்தமாக சென்னைக்கு பணிமாற்றம் செய்யவேண்டும்

Advertisement