Advertisement

டாக்டர்களுக்கு பாதுகாப்பு: வழக்கு ஒத்திவைப்பு

புதுடில்லி: மேற்கு வங்கத்தில், கடந்த, ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு டாக்டர்களுடன், முதல்வர், மம்தா பானர்ஜி, நேற்று பேச்சு நடத்தினார். 'ஊடகங்களுடன் தான் பேச்சுக்கு வர முடியும்' என்ற டாக்டர்களின் நிபந்தனையை ஏற்றார். இதையடுத்து, போராட்டத்தை டாக்டர்கள் நேற்று முடித்துக் கொண்டனர்.



இந்நிலையில் கோல்கட்டா அரசு மருத்துவமனை டாக்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். போதிய பாதுகாப்பை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, விடுமுறை கால அமர்வு நீதிபதிகள், தீபக் குப்தா, சூர்யகாந்த் முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், டாக்டர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டனர். இதனால், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியம்இல்லை எனக்கூறி வழக்கை, ஒத்திவைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • அருண்நம்பி - Chennai,இந்தியா

    விதி வலியது, புனிதமான சேவை மருத்துவம், எந்த மருத்துவனும் இதை கடைபிடிப்பது கிடையாது, பாதுகாப்பு மட்டும் வேணும் என்னடா ஞாயம்???

  • Rajan - singapore,சிங்கப்பூர்

    இறந்தவருக்கு என்ன நீதி

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    இந்த வழக்கை விசாரிக்கும் மாண்புமிகுந்த உச்ச நீதி மன்ற நீதிமான்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு என்று நீங்கள் நீதி வழங்கும்போது, பொதுவாக நாட்டில் உள்ள எல்லா பொதுமக்களுக்கும் அரசு தகுந்த பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று பொதுவாக ஒரு நீதியை உரைக்க சொல்லவும்.

  • Sridhar Sambandham -

    மருத்துவர்களுக்கு எனது சில கேள்விகள்? மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டு விட்டார் என்றவுடன் நாடு முழுவதும் ஒன்றிணைந்து போராடும் நீங்கள் ஏன் உத்தரப் பிரதேசத்திலும் பச்சிளம் குழந்தைகள் பிராண வாய்ப்பு இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த பொழுது நீங்கள் எங்கு சென்றீர்கள் அதேபோல் தற்போது பீகாரில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் நீங்கள் தவறு செய்யும் பட்சத்தில் உங்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது அதே சாதாரண நோயாளி தவறு செய்துவிட்டான் என்றாள் அவனை தூக்குமேடைக்கு ஏற்ற வேண்டும் என்கிறீர்கள், பீகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும் இன்னும் நாட்டில் பல பகுதிகளில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் உங்களை எந்த தூக்கு மேடைக்கு ஏற்றுவது? தவறு யார் செய்தாலும் தண்டிக்க பட வேண்டும்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    பிரித்தாண்டு நாட்டை சுரண்டியது வெள்ளையனுக்கு மொகலாயனும். இப்போ மொகலாய வம்சத்தைவைத்தே டாக்டர்களையும் நோயாளிகளையும் பிரித்தாள்வது மம்தா . எனவே சுப்ரீம்கோர்ட்டே மம்தா அரசைக் கலைக்க ஆலோசனை வழங்குவது நாட்டுக்குப் பாதுகாப்பு

Advertisement