Advertisement

கூட்ட அனுமதி வழக்கு தள்ளுபடி

மதுரை : துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே மாதம் போராட்டம் நடந்தது. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். விசாரணை நடக்கிறது. துாத்துக்குடி ராஜேஷ்குமார், 'துப்பாக்கிச் சூடு தொடர்பான நினைவு தின ஊர்வலம், பொதுக்கூட்டம் துாத்துக்குடியில் நடத்த அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement