Advertisement

--முதுகுவலியை குறைக்க டெக்னோ நோட்டு

மேலுார், : மாணவர்களின் நோட்டுக்கள் சுமையை குறைக்க ஓராண்டிற்கு ஒரே நோட்டை மாற்றி மாற்றி பயன்படுத்தும் வகையில் டெக்னோ நோட்டை கண்டுபிடித்துள்ளார் மேலுார் இளைஞர் செந்தில் 38.விவசாயிகளுக்கான உபகரணங்கள், மின்கம்பம் ஏறுவதற்கு மலிவு விலை கிரேன் போன்ற சில பொருட்களை செந்தில் கண்டுபிடித்துள்ளார்.தற்போது மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அதிக நோட்டுக்களை சுமந்து செல்வதை தவிர்க்க டெக்னோ நோட்டை கண்டுபிடித்துள்ளார்.
இதன் மூலம் மாணவர்களின் முதுகு வலி தவிர்க்கப்படும். செந்தில் கூறியதாவது: இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்ட டெக்னோ 3 டி அட்டையில் மாணவர்களை கவரும் வகையில் நோட்டு தயாரித்துள்ளேன்.ஒரு பாடத்துக்கு25 பக்கம் வீதம் 6 பிரிவாக நோட்டு தயாரிக்கப்பட்டு பேப்பர் இரு புறமும் பின் இணைத்துள்ளேன். பக்கங்களில் எழுதி முடிந்ததும் பின்னை அகற்றி பேப்பர்களை இணைத்துகொள்ளலாம். தற்போது பத்து பள்ளிகள் வரை இந்த நோட்டை வாங்கியுள்ளனர் என்றார். இவரை பாராட்ட 99444 37098.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement