Advertisement

யூக்கலிப்டஸ் மரங்களால் கண்மாய்க்கு வராத மழைநீர்: விவசாயிகள் வேதனை

காரைக்குடி : காரைக்குடி அருகே மாத்துார் கருவேப்பிலை காளியம்மன் கோயில் காட்டு பகுதிகளில் வனத்தோட்ட கழகத்தின் சார்பில் 200 ஏக்கருக்கும் மேல் யூக்கலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இடியுடன் மழை பெய்ததால் மழைநீர் வெளியே செல்லாத வகையில் யூக்கலிப்டஸ் மரங்களுக்கு இடையே உழவு பணியை வனத்தோட்ட கழகத்தினர் மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உழவு பணி நிறுத்தப்பட்டது.சங்கர், மாத்துார் : யூக்கலிப்டஸ் மரங்களால் கண்மாய்க்கு வரக்கூடிய மழை நீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

இந்த பகுதிகளில் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது. கண்மாய் பகுதிக்கு மழை நீர் வந்தால் மான், ஆடு, மாடுகள் தண்ணீர் பருகும். ஆனால் இந்த மரங்களால் நிலைமை முற்றிலும் மாறி விட்டது. வனத்தோட்ட கழகத்தினர் மழை நீர் கண்மாய் பகுதிக்கு செல்லாமல் டிராக்டர் மூலம் ஆழமாக உழுவதால் பெரிய மழை பெய்தாலும் இந்த காட்டு பகுதியிலேயே மழை நீர் தேங்கி விடும். மேலும் கண்மாய் பகுதிக்கு செல்லக் கூடிய வரத்து கால்வாய் பகுதியை இவர்கள் மறித்து மழை நீர் மரங்களுக்கு செல்லும் வகையில் உழவு செய்ததை தடுத்து நிறுத்தி உள்ளோம். காட்டுப் பகுதியில் பெய்யும் மழைநீர் தடையின்றி கண்மாய் பகுதிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement