Advertisement

முடங்கிய தரைமட்ட தொட்டி குடிநீருக்கு தட்டுப்பாடு

சிவகங்கை : சிவகங்கையில் தெருக்களில் அமைக்கப்பட்ட குடிநீர் தரைமட்ட தொட்டிகள் செயல்பாடின்றி முடங்கி கிடப்பதால், நகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளன.இங்குள்ள 27 நகராட்சி வார்டுகளில் 120 க்கும் மேற்பட்ட தரைமட்ட குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி கட்டி, குடிநீர் வினியோகித்து வந்தனர். இத்தொட்டிகள் அமைத்து 10 ஆண்டுகள் வரை ஆனது. தொடர்ந்து அவற்றை பராமரிக்காமல் நகராட்சி அதிகாரிகள் அப்படியே போட்டுவிட்டனர். இதனால் இத்தொட்டிக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் நீர் வரத்து இன்றி, தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளன.

கடும் வறட்சியால் உவர்ப்பு நீரை கூட பயன்படுத்தும் நிலையில் உள்ள நகர் மக்களுக்கு தரைமட்ட தொட்டிகளில் தண்ணீர் வினியோகமின்றி தவித்துவருகின்றனர். நகராட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கும் குடிநீர் தரைமட்ட தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement