Advertisement

'குடிநீர் பஞ்சம்' ஊற்று தோண்டி எடுக்கும் அவலம்

சிவகங்கை : சிவகங்கை ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சி நல்லாகுளத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் உப்பாறு ஆற்றில் 5 அடி ஆழத்திற்கு ஊற்று தோண்டி அகப்பையில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வே கிடைக்காததால், ஊரை காலி செய்துவிட்டு பல குடும்பத்தினர் சிவகங்கைக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.சிவகங்கை - மதுரை ரோட்டில் நல்லாகுளம் கிராமம் உள்ளது.

இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கிடைக்கும் நிலத்தடி நீர் இயற்கையிலேயே உவர்ப்பு தன்மையானது. இதனால் குடிநீருக்கு வழியின்றி உவர்ப்பு நீரையே பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரம் நல்ல மழை காலங்களில் கிராமத்திற்கு அருகே செல்லும் உப்பாறு ஆற்றில் ஊற்று தோண்டி அங்கு கிடைக்கும் நீரை அகப்பையில் எடுத்து குடிநீர், சமையல் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

மணல் கொள்ளையால் குடிநீர் ஆபத்துகாலப்போக்கில் இந்த ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை அதிகரித்து விட்டது. கடும் வறட்சியால் ஆற்றில் நீர்வரத்து இன்றி பாலைவனம் போல் காட்சி அளிக்கின்றன. இதனால் குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் இக்கிராம மக்கள் ஆற்றில் ஆங்காங்கே ஊற்று தோண்டுவதின் மூலம் கிடைக்கும் சொற்ப நீரை அகப்பை மூலம் எடுத்து குடங்களை நிரப்பி செல்கின்றனர்.ஊற்று நீருக்கு ஆற்றில் காத்திருப்பு அதிகாலையில் காலிக்குடங்களுடன் பல கி.மீ., துாரம் நடந்து ஆற்றுக்கு செல்கின்றனர். இங்கு ஒரு குடம் ஊற்று நீரை எடுக்க ஒரு மணிநேரம் வரை காத்துக்கிடக்க வேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

குடிநீர் பஞ்சத்தால் நல்லாகுளத்தில் அடிப்படை பணிகளை கூட செய்யமுடியாமல் பொதுமக்கள், மாணவர்கள் தவித்து வருகின்றனர். குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாத பல குடும்பத்தினர் சிவகங்கைக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.கிடப்பில் சித்தலுார் கூட்டுகுடிநீர் திட்டம்இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், 2007-- 08 ம் ஆண்டில் 49.14 லட்சம் ரூபாய் செலவில் சித்தலுார் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தினர். இதற்காக வைகை ஆற்றில் பச்சேரி என்ற இடத்தில் போர்வெல் அமைத்து வேம்பத்துார், சித்தலுார், முத்தலுார், முளக்குளம்,நல்லாகுளம், கரும்பாவூர் வரை 11 கி.மீ., துாரத்திற்கு வைகை குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை துவக்கினர்.

ஆரம்பத்தில் இப்பகுதி மக்களுக்கு வைகை குடிநீர் கிடைத்தது. இக்குடிநீர் திட்டத்தை குடிநீர் வடிகால் வாரியம் தொடர்ந்து பராமரிக்கவில்லை. இதனால் 10 ஆண்டுகளாக வைகை கூட்டுகுடிநீர் நல்லாகுளம், கரும்பாவூர் மக்களின் தாகத்தை தீர்க்கவில்லை. மக்கள் கருத்து:மணல் கொள்ளைக்கு எதிர்ப்புஎன்.மாரிமுத்து, விவசாயி, நல்லாகுளம்: குடிநீர் தேவையை அரசு பூர்த்தி செய்யாததால், உப்பாறு ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கிறோம். ஆரம்பத்தில் இந்த ஆற்றில் மணல் திருட்டே நடக்காது. அப்போது நல்ல நீர் ஊற்று கிடைத்தது. தற்போது ஆற்று மணலை கொள்ளையடித்துவிட்டதால், ஊற்று நீர் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இதை உணர்ந்து தான் உப்பாறு ஆற்றில் யார் மணல் அள்ளினாலும், கிராமத்தினர் எதிர்த்து வருகிறோம், என்றார்.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்பேச்சிமுத்து, குடும்ப தலைவி, நல்லாகுளம்: எங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்னையை போக்க 10 ஆண்டுக்கு முன் கூட்டுகுடிநீர் குழாய் பதித்தனர். ஆனால் முறையாக தண்ணீர் கொண்டு வராமல், அத்திட்டத்தை முடக்கி விட்டனர். குடிநீர் பஞ்சத்தால் அடிப்படை தேவைகளை கூட பெறமுடியாமல் தவிக்கிறோம். எந்த அரசு அதிகாரிகளும் எங்களுக்கு குடிநீர் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கவே இல்லை.2 குடத்திற்கு 5 மணி நேரம் காத்திருப்புகொங்கேஸ்வரி, குடும்ப தலைவி, நல்லாகுளம்: ஆற்றில் ஊற்று தோண்டி ஒரு மணி நேரம் காத்திருந்தால் தான் ஒரு குடம் தண்ணீர் கிடைக்கும்

இதற்காக அதிகாலை 5:00 மணிக்கெல்லாம் உப்பாறு ஆற்றுக்கு வந்துவிடுவோம். இரண்டு குடம் தண்ணீர் எடுக்க காலை 10:00 மணி வரை காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் காலையில் உணவு சமைத்து, பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப முடியாமல் சிரமப்படுகிறோம். மாவட்ட நிர்வாகம் எங்கள் நிலையை உணர்ந்து கூட்டுகுடிநீர் திட்டத்தை புனரமைத்து தண்ணீர் கொண்டுவர வேண்டும்.

மீட்கும் பணியில் கூட்டுகுடிநீர் திட்டம்சிவகங்கை, குடிநீர் வடிகால் வாரிய கிராம குடிநீர் திட்ட பொறியாளர் ஒருவர் கூறியதாவது, மதுரை -- தொண்டி ரோடு விரிவாக்கத்தின் போது, கரும்பாவூர் விலக்கில் கூட்டுகுடிநீர் திட்ட குழாய்களை உடைத்து விட்டனர். அதற்கு பின் இந்த குழாய்களை செப்பனிடவில்லை. மேலும், குடிநீர் வரும் வழியிலேயே குழாய்களை சேதப்படுத்தி குடிநீர் பிடித்து விடுவதால், கரும்பாவூர் வரை வைகை நீர் வராமல் திட்டம் முடங்கியது. மீண்டும் சேதமான குழாய்களை புனரமைத்து வைகை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement