Advertisement

நடுநிலை வகுப்பு ஆசிரியர்கள் தடுமாற்றம்

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியத்தில் நடுநிலை வகுப்பு வரை நோட்டுக்களும், புத்தகங்களும் வழங்கப்படாததால் பாடம் நடத்துவதில் ஆசிரியர்கள் தடுமாறி வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு வாரங்களாகி விட்டன. ஆனால் 3,4,5 ம் வகுப்புகள், 8-ம் வகுப்பு பாட புத்தகங்கள் வினியோகிக்கப்படவில்லை. 6,7 ம் வகுப்புகளுக்கு அறிவியல்,சமூக அறிவியல் புத்தகங்கள் தரப்படவில்லை.மேலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நோட்டுக்களும் வினியோகிக்கப்படவில்லை.

இப்படி புத்தகங்களும் நோட்டுக்களும் இல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் ஆசிரியர்கள் தடுமாறி வருகின்றனர்.'ஆன் லைன்' புத்தகத்தை வைத்து நடத்தினால் மாணவர்கள் புத்தகங்கள் இல்லாமல் எப்படி கவனிக்க முடியும் என்று ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களை பழைய நோட்டுக்களை கொண்டு வரச் சொல்லி ஆங்கில,தமிழ் இலக்கணம், அடிப்படை கணிதம் தமிழ் செய்யுள் போன்ற அடிப்படை பாடங்களை நடத்தி சமாளிக்கின்றனர்.

ஆண்டு வேலை நாட்கள் 210ல் தற்போது 15 நாட்கள் கழிந்து விட்ட நிலையில் தாமதமாக புத்தகங்களை வழங்குவது, ஆசிரியர்கள் பாடங்களை முடிப்பது சவாலாகி ஒரு வித நெருக்கடியை ஏற்படுத்தி விடும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement