Advertisement

வயநாடு எம்.பி.,யாக பதவியேற்றார் ராகுல்

புதுடில்லி ; 17 வது லோக்சபாவில் இன்று புதிய எம்.பி.,க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல், வயநாடு எம்.பி.,யாக பதவி ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, லோக்சபா சபாநாயகராக வீரேந்திரகுமார் பதவி ஏற்றார். பின்னர் அவர் 17 வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய எம்.பி.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

வயநாடு எம்.பி.,



முதலில், பிரதமர் நரேந்திரமோடி வாரணாசி எம்.பி.,யாக பதவி ஏற்றார். பின்னர் மூத்த அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பின்னர் மாநில வாரியாக எம்.பி.,க்கள் பதவி ஏற்றபோது, கேரள மாநிலம் வயநாடு எம்.பி.,யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் பதவி ஏற்றுக்கொண்டார்.

ஆங்கிலத்தில்...



பல எம்.பி.,க்கள் அவர்களது தாய்மொழியில் பதவி ஏற்றுக்கொண்டனர். ராகுல், ஆங்கிலத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். நாளையும் (ஜூன் 18 ) எம்.பி.,க்கள் பதவி ஏற்பு தொடர்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • K Ganesan - Mumbai,இந்தியா

    கேரளா அசெம்பிளி எலெக்ஷனுக்கு பிறகு ராகுல் காந்தி கேரளா முதல்வர்ஆக பதவி ஏற்கலாம்.

  • ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா

    சேட்டனின் சேட்டைகள் ஆரம்பம்....

  • ரத்னம்,பெங்களூரு - ,

    ராகுலுக்கு அபார தீர்க்கதரிசனம்.பாருங்களேன் அமெ"தீ" எரித்துவிடும் என்று முன்யோசனையுடன் வயநாட்டு பச்சை கடலில் மூழ்கி விட்டார்

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    ராகுல் வின்சி ஆங்கிலத்தில் பதவி ஏற்றாரா?? வெட்கம் லத்தீன், ஹிந்தியிலோ, மலையாளத்திலோ அல்லவா செய்திருக்கவேண்டும்?

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    சேட்டன் இனி மலையாளத்தில் சம்சாரிக்குமா

Advertisement