Advertisement

காஷ்மீர்; ராணுவ மேஜர் வீரமரணம்

அனந்தநாக் : காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சண்டையில், இந்திய ராணுவ மேஜர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

சுற்றிவளைப்பு :



அனந்த்நாக் மாவட்டம் அச்சபல் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்தப் பகுதியை சுற்றிவளைத்த வீரர்கள், அவர்களை தப்ப விடாமல் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தவே சண்டை தொடங்கியது.

மேஜர் வீரமரணம் :



பயங்கரவாதிகள் சுட்டதில் 2 வீரர்கள் காயம்பட்டனர். அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ராணுவ மேஜர் என்பது தெரிய வந்துள்ளது (பெயர் மற்றும் கூடுதல் தகவல்கள் இன்னமும் வரவேண்டியுள்ளது ) .

துப்பாக்கி சண்டை :



தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டை இன்னமும் நடக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    வேதனையா இருக்கு

  • RajanRajan - kerala,இந்தியா

    TIME TO CRASH ALL TERROR CAMP AT POK & CLEAN IT.

  • Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா

    ராஜ்நாத் சிங்கை வைத்து கொண்டு இருக்கிறோம் இன்னும் எத்தனை உயிர்கள் போக போகிறதோ தெரியவில்லை மோடி அவர்களே தயவு செய்து பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக போடவும் பாகிஸ்தான் பிடியில் உள்ள காஷ்மீரை மீட்டு அங்கு உள்ளவர்களை பாகிஸ்தானுக்கே துரத்தவும்

  • DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

    ஏன் இன்னும் மெத்தன போக்கு.. ராணுவத்தை முழுவீச்சில் பயன் படுத்தி இவர்களை ஒழித்து கட்ட வேண்டும். மக்கள் தான் பாஜக விற்கு முழு அங்கீகாரம் கொடுத்து விட்டனர் ? காஸ்மீரத்தில் கூட இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற செய்துள்ளனரே ... காஸ்மீரத்திற்கு வெளியே உள்ளவர்கள் கூச்சல் போடுவார்களோ என்று பார்த்து கொண்டிருக்க வேண்டாம்..

Advertisement