Advertisement

பிளாஸ்டிக்கிற்கு மாற்றை பயன்படுத்த முதல்வர் யோசனை

சென்னை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவது பற்றியும், அவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய அறிவிக்கை வெளியிட்டுள்ளது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், அரசின் ஆணையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழலை மீட்டெடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • sukumar - trichy,இந்தியா

  எல்லாம் சரி.... பயன்படுத்துபவர்களுக்கும், விற்ப்பவர்களுக்கும் வழங்கப்படும் அறிவுரையை முதலில் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்குங்கள் முதல்வர் அவர்களே... நெகிழி பயன்படுத்த தடை வித்தித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது... இன்றுவரையில் நெகிழி உற்பத்தி நிறுவனங்கள் ஏதாவது மூடப்பட்டுள்ளதா... இல்லை உற்பத்தி நிறுவங்கள் மூடப்படுவதற்கு ஏதாவது சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா... அல்லது அவர்களுக்கு காலக்கொடு கொடுக்கப்பட்டுள்ளதா.. இதுபற்றிய விளக்கம் ஏதாவது நாளிதழில் அரசு சார்பாக பிரசூரிக்கப்பட்டுள்ளதா... தமிழகத்தில் இத்தனை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளது.. இவ்வளவு நிறுவங்கள் மூடப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரம் ஏதாவது தங்களிடம் (அரசு) உள்ளதா.. தற்போது இவ்வளவு கூப்பாடு போடும் அரசாங்கம்... 6 மாதங்களுக்கு முன் உத்தரவிட்ட உடன் இதுவரையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற அறிக்கை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஊடகங்களில் தெரிவித்துள்ளதா.... மட்கும் தன்மையுள்ள நெகிழி உற்பத்திக்கு என்ன மாதிரியான திட்டங்கள் வகுத்துள்ளது. உற்பத்தி தொடங்குவதற்கு தேவையான திட்ட வரைவுகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதா.... இதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத இந்த அரசு.. பயன்படுத்துவதற்கு மட்டும் தடை விதிக்க இவ்வளவு முனைப்பு காட்டுகிறது. மக்கள் தயாரகிவிட்டார்கள்.. ஆனால், வியாபார நிறுவனங்கள் தயாராக வில்லை.. இதற்கு யார் காரணம்.... பதிலுக்காக காத்திருக்கும் சாதாரண மனிதன்.

 • J.Isaac - bangalore,இந்தியா

  மந்திரிகளும் சட்ட மன்ற உறுப்பினர்களும் கவுன்சிலர்களும் எல்லா துறை அதிகாரிகளும் அலுவலர்களும் முக்கியமாக காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை தடை செய்யப்பட வேண்டும். லஞ்சம் வாங்குவது பிடிபட்டால் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

 • Jayvee - chennai,இந்தியா

  முதலில் பிராட்வே இல் உள்ள அணைத்து கடைகள் மற்றும் கோடௌன் களை ரைட் செய்யவும்.. இன்று அளவும் அங்கு தடைசெய்யப்பட்ட பாலிதீன் மற்றும் டி கப்புகள் தாராளமாக விற்கப்படுகிறது .... அதிகாரிகள் துணையுடன் அரசியல் வாதிகள் ஆசிகளுடன் .. விற்பது வட இந்திய மற்றும் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் அரசு பயப்படுகிறது

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  I used to carry clothe bags when I was in school and college. Very thin Plastic bags can not be recycled The amount of plastic items collected in oceans is millions of tons which kill the fish. There was a ton of plastic bags inside the belly of a whale which died and brought to the shore. If we are not alert now and lazy not to carry clothe bags with us while going to market, our future generations will suffer due to pollution and environment factor. Now a days most of the shops in Mumbai use news paper or sell clothe bags .If we forget to take bag with us, pay for buying a new bag in the grocer shop. There is no much harm if we use thicker plastic bags which can be recycled.But it is better to avoid it please.

 • LAX - Trichy,இந்தியா

  எப்போ பாத்தாலும் நாயகன் டயலாக் (அவனை நிறுத்தச்சொல்லு.. நான் நிறுத்தறேன்..) பாணியில் பேசிக்கொண்டே இருந்தால் ஒண்ணுத்துக்குமே உதவாது..

Advertisement