Advertisement

ஆசிரியர் போராட்டம்: மம்தாவுக்கு அடுத்த தலைவலி

கோல்கட்டா : டாக்டர்கள் போராட்டத்தை அடுத்து மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த தலைவலியாக மாறியுள்ளது.

டாக்டர்கள் போராட்டம் :மேற்குவங்கத்தில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டாக்டர்கள் பாதுகாப்பு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று (ஜூன் 17)ல், நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரம் :கோல்கட்டா மருத்துவமனை ஒன்றுக்கு போராடும் மருத்துவர்களை சந்திக்க சென்ற மம்தா, அவர்களது கோரிக்கைகளை கேட்காமல், பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், 4 மணி நேர கெடு விதித்து எச்சரித்திருந்தார். இது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

ஆசிரியர்களும் போராட்டம் :இந்த நிலையில், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கோல்கட்டாவின் விகாஸ் பவன் முன்பாக ஊர்வலம் நடத்திய ஆசிரியர்களுக்கும், போலீசாருக்கம் இடையில் மோதல் வெடித்தது.

மம்தா அதிர்ச்சி :தொடர்ந்து ஆசிரியர்கள் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது மம்தாவின் நிர்வாகத்திற்கு மேலும் தலைவலியாக மாறியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (24)

 • Indhuindian - Chennai,இந்தியா

  தீதி க்கு மிகப்பெரிய வர பிரசாதம். வாத்யாருங்க ஆர்பாட்டம் பண்ணா பள்ளிகூடம்லாம் மூடிடுவாங்க அந்த பசங்களையெல்லாம் கூட்டிகிட்டு வந்து தி எம் சி இலே சேத்துட்டு அடியாட்களா தயார் பண்ணிட ஒரு நல்ல சந்தர்ப்பம். இளமயில் கல் என்று சொல்வதில்லயா? அது என்ன திராவிட கட்சிகளின் சொத்தா என்ன. மமதா வும்தான் உபயோகப்படுத்திகிட்டுமே

 • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

  இன்றைய தினம் ஆசிரியர்கள் அதிகமாக ஊதியம் பெற்றுவருகின்றனர், ஆனால் அதற்கேற்ற பணியை செய்வதில்லை. அனைத்து மாணவர்களும் கட்டாய பாஸ் என்ற விதி வந்தபிறகு இவர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டிய கட்டாயம் இல்லை. இதுவே இவர்களுக்கு இன்னும் சுதந்திரம் கொடுத்துவிட்டது. பாதி ஆசிரியர்கள் பகுதி நேரமாகவே பள்ளிக்கூடம் வருவதும், முழு நேர வியாபாரம்,இன்சூரன்ஸ் ஏஜென்ட் பணி, செய்து வருவதும் உண்மை நிலை. இந்தநிலையில் இவர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடும் என்பது வடிகட்டிய பொய்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  உடனே டிஸ்மிஸ் பண்ணு..திஹார்ல போடு..தண்ட சம்பளம். இதை டாக்டர்கள் போராட்டத்தின் போதும் எழுதினேன் .

 • Diya -

  Prevention is better than cure. Hereafter, all political leaders of state and central should approach the leadership team of all the employee unions, collect it, analyze whichever feasible while not degrading the economy, and publish it to public. This is to avoid salary and allowances related strikes. Its perfectly understood that today cost of living is going high, at the same time apart from these employees who have union, there are other public outside who has no voice to express their problems. Whatever available has to be shared to all the citizens like the saying... chattiyil irunthaal thaan aapaiyil varum... Or else, if every one wants to do job strike, then they will soon realize it is not the problem with their salaries but the problem with artificially inflated costs such as real estates, school fees, hospital charges, etc. If the job employee union does a strike for above public issues, then it will surely succeed because the motive is not selfish. If farmers do such strikes for a week during the time they need to do the farming work, then a country cannot bear it. So, it is better to understand the root cause of the problem and fight for it.

 • sridhar - Chennai,இந்தியா

  பிரதீஷ், ஜீவன். உங்களுக்கு பாவாடை கலவரம் செஞ்சா இனிக்குதா ? தூத்துக்குடி பொருளாதாரத்தை நாசமாக்கி, 13 உயிர்களை பலி வாங்கியவர்கள் நல்லவர்கள், பிஜேபி கெட்டவர்கள். ஆம், இந்தியா முழுதும் சுடலை உட்பட தீயவர்களை களை எடுக்கப் போகிறார்கள். என்ன செய்வீர்கள்.

Advertisement