Advertisement

பீஹாரை வாட்டும் வெயில்: 40 பேர் பலி

பாட்னா: பீஹாரில் கொளுத்தும் வெயில் காரணமாக நேற்று(ஜூன் 15) ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். அவுரங்காபாத்தில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். கயா மாவட்டத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். நவாடா பகுதியிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

அவுரங்காபாத் அரசு மருத்துவமனை டாக்டர் கூறுகையில், மாவட்டத்தில் அனல்காற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்கள் அனைவரும், காய்ச்சல் அதிகளவு இருந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி செய்யப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.



மத்திய அமைச்சர் ஹர்ஸ்வர்தன் கூறுகையில், உயிரிழப்பு ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம். அதிகளவு வெப்பம் மூளையை பாதிப்பதுடன், பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement