Advertisement

புல்வாமாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி?

புதுடில்லி:காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் அளித்ததை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான அன்சார் காஸ்வத் அமைப்பின் தளபதி ஜாகிர் மூசா கடந்த மாதம் காஷ்மீரின் டிரால் பகுதியில் சுட்டு கொல்லப்பட்டான். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா நெடுஞ்சாலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு, அந்நாடு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • kumzi - trichy,இந்தியா

    சோழியன் குடுமி சும்மா ஆடாதே

  • Nathan - Hyderabad,இந்தியா

    பழைய செட்டியார் எங்கப்பா , பாகிஸ்தான் பொருளாதாரம் துவளுதாம், புது ரூபா நோட்டு அச்சடிக்கற காகிதம் பத்து டன்னு, மெஷின்ல ஒரு நாலு ரிஜெக்ட்ட் னு டெண்டர் உட்டு அவங்களுக்கு தள்ளி காசு பாக்க வேணாமா. பாம்பா, வேற தொழில் தெரியாது.

  • mthahir - Kuwait,குவைத்

    இப்போது தேர்தல் எதுவும் இல்லையே (அ) மதிய அரசுக்கு எதுவும் பிரச்னை இல்லையே பிறகு ஏன்???....

  • RajanRajan - kerala,இந்தியா

    பாகிஸ்தானே தகவல் கொடுத்ததால் தீவிரவாதிகளை அவர்களால் தடுக்க முடியவில்லை என்பது தெளிவு. எனவே நாம் Pok ல் புகுந்து அத்தனை தீவிரவாத முகாம்களையும் இஸ்ரேல் பாணியில் துவம்சம் பண்ணி விட வேண்டும்

  • தமிழ் குடி மகன் -

    பாகிஸ்தான் கொடுத்த தகவல் என்றால் கண்டிப்பாக பொய்தான். அமைதி பேச்சு வார்த்தையை தொடங்குவதற்கு தான் இந்த நாடகம். அப்பொழுது தான் இவர்கள் மீது உள்ள பொருளாதார தடை நீக்கப்படும். பின்பு முன்னர் போல தீவிரவாதத்தை தொடரலாம் !!!

Advertisement