Advertisement

ஜூலை 5 ல், 6 ராஜ்யசபா எம்.பி., தொகுதி இடைத்தேர்தல்

புதுடில்லி : பீகார், ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து ராஜ்யசபாவில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்ற அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத், ஸ்மிரிதி இரானி ஆகியோர் லோக்சபா எம்.பி.,க்களாக வெற்றி பெற்றுள்ளதால் அவர்களின் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகள் காலியாகி உள்ளன.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலியாக உள்ள 6 ராஜ்யசபா பதவிகளுக்கு, வரும் ஜூலை மாதம் 5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

ஓட்டுகள் அன்றைய தினமே எண்ணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா

    சபாஷ், NDA அரசுக்கு, மேலும் வலு சேர்க்க வாழ்த்துக்கள்.

Advertisement