ADVERTISEMENT
கன்னியாகுமரி: பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன் 60. தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படைப்புகள் மேற்கொண்டுள்ளார். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகள் குவித்த முழு நேர எழுத்தாளர். இவர் பல்வேறு சினிமாக்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார்
நேற்று இரவு அவர் பார்வதிபுரத்தில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். பொருட்கள் வாங்கும்போது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளனர். எனவே சம்பவம் குறித்து அவர் வடசேரி போலீஸ் ஸ்டேஷனில் ஜெயமோகன் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.