Advertisement

மீண்டும் அதிமுகவிற்கு தாவிய நடிகர் ராதாரவி

சென்னை: அரசியலில் கட்சி மாறுவது சகஜமான ஒன்று. தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக திகழும் நடிகர் ராதாரவி, திமுக., அதிமுக., என மாறி மாறி பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் திமுக.,வில் இருந்தவர், பின்னர் அதிமுக., பக்கம் போனார். முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி மீண்டும் திமுக.,வில் இணைந்தார்.

சில மாதங்களுக்கு முன் நயன்தாரா நடித்த, கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ராதாரவி, நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்தார். இது சர்ச்சையானது. இதையடுத்து, ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்திருந்தார். அப்போது முதலே, திமுக.,வின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார் ராதாரவி. இவர் மீண்டும் அதிமுக.,வில் இணைய இருப்பதாக செய்திகள் பரவின.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மீண்டும் தன்னை அதிமுக.,வில் இணைத்து கொண்டார் ராதாரவி. அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

  • ஆப்பு -

    கூத்தாடியால், கூத்தாடிக்களுக்காக, கூத்தாடிகளால் நடத்தப்படும் கட்சி. இதுல அப்பப்போ சிலர் தாவி வந்து தாவி போய் விடுவார்கள். இவிங்க மேல தப்பில்லை. இவங்களுக்கு இட்டுப் போட்டாங்களே அவங்களைச் சொல்லணும்.

  • குமார் -

    எல்லாம் mp பதவி மோகம்தான்.

  • natarajan s - chennai,இந்தியா

    இவர் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை சரத்குமார் உடன் சேர்ந்து ஆட்டையை போட்டதை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, அதிலிருந்து தப்பிக்க ஆளும் கட்சி உதவி தேவை அதனால்தான் நைனா கட்சி மாறிவிட்டார்.

  • nanthuji -

    ॐ.அட மானங்கெட்டவிங்களா.. இதுக்கு எதுக்கு, வெள்ளையும் சொள்ளையுமா, கண்ணாடியோட திரியணும்..

  • oce - chennai,இந்தியா

    தொட்டால் சுடும் என்று இவருக்கு தெரியாமல் போனது ஏன். இவர் தந்தையும் இப்படிப்பட்ட முரட்டு ஆசாமியே. ஆப்பதனை அசைத்த குரங்கு வால் மரப்பிளவில் சிக்கிய பின் தவிப்பது போல் முழிப்பவர்கள்.

Advertisement