Advertisement

மதுரையில் போலீஸ் ஸ்டேசன் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

மதுரை: மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயம். இவரது மகன்கள் ரஞ்சித், அஜித். வெட்டு குத்து வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். இதன் பேரில் தல்லாகுளம் போலீஸ் ஸ்டேசனில், ரஞ்சித்தும், அஜித்தும் கையெழுத்து போட வந்தனர். அப்போது, அங்கு வந்த கும்பல் ஒன்று இருவர் மீதும் தாக்குதல் நடத்தியது. இதில் அஜித் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ரஞ்சித் காயங்களுடன் தப்பினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய விக்னேஷ் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    யாரங்கே...அமைதிப் பூங்கா காவலருக்கு அமைதி விருதுக்கு ஏற்பாடு செய்யுங்க.

Advertisement