Advertisement

ஜூலை 15ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன்2

பெங்களூரு : சந்திராயன் 2 விண்கலம் வரும் ஜூலை 15ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.


சந்திராயன் 1 வெற்றியை தொடர்ந்து, நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்ப உள்ள சந்திராயன் 2 பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.பெங்களூரு மாரத்தள்ளியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இறுதி கட்ட பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.



இந்நிலையில், நிருபர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது: சந்திராயன் 2 விண்கலம், ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் . 3.8 டன் எடை கொண்ட இந்த விண்கலம், பிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இந்த விண்கலத்தில் 13 வகையான அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தப்படும். செப்., 6ம் தேதி நிலவில் தரையிறங்கும். நிலவின் தென் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • arudra1951 - Madurai,இந்தியா

    குடிக்க தண்ணீர் இல்லை இதில் ராக்கெட் ஒரு கேடா ?

Advertisement