Advertisement

பொதுச்செயலாளர் எடப்பாடி?: போஸ்டரால் பரபரப்பு

சென்னை : அதிமுக நிர்வாகிகள், எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 12) நடைபெறும் நிலையில், பொதுச் செயலாளர் எடப்பாடியார் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுக.,வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அதிமுக.,விற்கு ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்தி எம்எல்ஏ., ராஜன் செல்லப்பா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதனையடுத்து ஜூன் 12 அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் கட்சியினர் யாரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ஒற்றை தலைமை குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.



அந்த போஸ்டரில், "பொதுச் செயலாளராக பதவியேற்க வரும் எடப்பாடியாரே வருக" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் எதிரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதேபோல், சிவகங்கை மாவட்டத்தில், அமைச்சர் செங்கோட்டையனை பொது செயலாளராக நியமிக்க வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

  • விவசாயி - Tiruppur,இந்தியா

    ஊழல்திமுக அஇஅதிமுக கட்சிக்காக போஸ்டர் ஒட்டும் நிலையில் கூட நாற்காலி மேல கண்

  • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

    தினகரன் - சசிகலா - ஸ்டாலின் போன்றோரின் கூட்டுச் சதி. விஞ்ஞான ஊழல் எப்போதும் வெற்றி பெறாது.

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

    "அணைத்து"??? ஹிந்தி எதிர்ப்பு இருக்கட்டும். முதல்ல தமிழை ஒழுங்காக படிங்க

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

    எடப்பாடியார் மனதளவில் சசிகலா விசுவாசி, எனவே அவர் பொது செயலாளராக வந்தால் கண்டிப்பாக பன்னீர் தலைமையில் அதிமுக உடைந்து ஜெயலலிதா தலைமையில் எழுச்சி பெற்றதைபோல் பின் எழுச்சிபெறும் என்பது எனது கருத்து

  • சாந்தநாதன் -

    ￰எழுத்துப்பிழையோடு போஸ்டர் அடிக்கிறார்கள்

    • Narasimhan - Manama

      இவங்கள்ளாம் தமிழ் மொழியை வளர்க்கிறார்களாம். திமுக இதைவிட மோசம். சமீபத்தில் களைஞர் என்று போட்டிருந்தார்கள். சன் டிவியின் முன்னணி செய்தியாளர்களும் ளவுக்கு ல என்றுதான் படிக்கிறார்கள். இந்தி கற்றுக்கொள்வதற்கு முன் இவர்கள் தமிழ் ஒழுங்காய் கற்று கொள்ளட்டும்.

Advertisement