Advertisement

ஜெகன் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி?

விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்க பா.ஜ., முன்வந்துள்ளது. ஆனால், இதனை ஏற்பது குறித்து அக்கட்சி இன்னும் பதிலளிக்கவில்லை.


சமீபத்தில் நடந்த, 17வது லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. லோக்சபாவின் முதல் கூட்டம், விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில், 17வது லோக்சபாவின் தற்காலிக சபாநாயகராக, பா.ஜ.,வின் மூத்த தலைவர், வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் பிறப்பித்து உள்ளார்.



இந்நிலையில், துணை சபாநாயகர் பதவியை ஓய்எஸ்ஆர் கட்சிக்கு வழங்க பா.ஜ., முன்வந்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்மராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நீடித்தது. துணை சபாநாயகர் பதவியை ஏற்பது குறித்து பதிலளிக்கவில்லை. முடிவெடுக்க சில நாட்கள் அவகாசம் தேவை என அக்கட்சி கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    க்ரித்த்துவ முஸ்லிம்களுக்கு கொடுக்கவேண்டாம் வெறும் இந்தியர்களுக்கு மட்டுமே கொடுக்கவேண்டும் இனி எந்த அரசு பதவியையும். பியூஸ் கோயல் துணை சபாநாயகர் என்று செய்தி வந்ததே சில நிமிடங்களுக்கு முன்பு???

  • K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா

    திருப்பதி ஏழுமலையான், ஜெகனின் தாய்மாமாவை திருப்பதி தேவஸ்தான தலைவராக நியமனம் செய்ததால், லோக்சபா துணை சபாநாயகர் பதவியை வாங்கி தந்துள்ளார்.

  • Kannan - Chennai,இந்தியா

    நல்ல முடிவு. ஜெகன் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி சரிதான். பிஜேபிக்கு ஆந்திராவில் ஒரு மேப் கூட இல்லை. எனவே இந்த திட்டம் சரிதான். மோடி முடிவு சரியே. இல்லையெனில் நம்ம மு க குடும்பத்துக்காரர்கள் ஸலாம் போட்டு பதவியை வாங்க துடிப்பார்கள்.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    Very Good , appreciated and welcome decision by the BJP government at the centre.

  • Mal - Madurai,இந்தியா

    Till now Hindus have been patient and we have always supported BJP.. ...

Advertisement