Advertisement

லாரி மோதி ஒருவர் பலி

சென்னை: நன்மங்கலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 50; தனியார் நிறுவன மேற்பார்வையாளர். நேற்று காலை, இருசக்கர வாகனத்தில், கோவிலம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, கழிவுநீர் லாரி மோதியதில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், லாரியின் பின் சக்கரம் ஏறியதில், சம்பவஇடத்திலேயே பலியானார்.ஆத்திரமடைந்த பொதுமக்கள், கழிவுநீர் லாரியை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement