Advertisement

சாலை விபத்தில் மேஸ்திரி பலி

சென்னை: புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர், நவீன்குமார், 25; மேஸ்திரி. இவர், 10ம் தேதி இரவு, குடிபோதையில் இருசக்கர வாகனத்தை, நாராயண குருசாமி சாலை வழியாக ஓட்டிச் சென்றார். அப்போது, வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
படுகாயமடைந்தவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

Advertisement