Advertisement

நாங்குநேரி தொகுதி யாருக்கு? தி.மு.க., - காங்கிரஸ் மோதல்

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, தி.மு.க.,வும், காங்கிரசும் பிடிவாதம் பிடிப்பதால், கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், நாங்குநேரி தொகுதியில், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர், வசந்தகுமார் வெற்றி பெற்றார். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு, வசந்தகுமார் வெற்றி பெற்றதும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை, ராஜினாமா செய்தார்.

இதனால், நாங்குநேரி சட்டசபை தொகுதி காலியாகி உள்ளது. இது, காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், மீண்டும் போட்டியிட வேண்டும் என, காங்கிரஸ் விரும்புகிறது. எனவே, தி.மு.க., கூட்டணியில் இடம்பெறுள்ள அக்கட்சி, நாங்குநேரி தொகுதியை பெறுவதில் பிடிவாதமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம், திருச்சியில் நடந்த, தி.மு.க., விழாவில் பேசிய, நடிகர் உதயநிதி, ''நாங்குநேரி தொகுதிக்கு, விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. அத்தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தால், எளிதாக வெற்றி பெற்று விடுவோம்,'' என்றார்.

உதயநிதி பேச்சு குறித்து, வசந்தகுமார் கூறுகையில், ''காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுவது பற்றி, கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசித்து, முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.

இரு கட்சிகளும் விட்டுக் கொடுக்க மனமின்றி, பிடிவாதம் பிடிப்பதால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண, விரைவில், காங்கிரஸ் தலைவர் ராகுலிடம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேச திட்டமிட்டுள்ளதாக, அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    சித்தப்பு காலி செஞ்ச தொகுதியில் அண்ணன் மக நிக்கலாமே. தூத்துக்குடி மாதிரி அங்கேயும் சாதி ஒட்டு இருக்கே.

  • விவசாயி - Tiruppur,இந்தியா

    இனி திமுக வந்தாலும் திருட முடியாது.....காரணம் காங்கிரஸ் ஆட்சி அல்லவே

    • சுந்தரம் - Kuwait,குவைத்

      நேரடியாக வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது திமுக திருடவே இல்லை என்று சொல்லவேண்டியதுதானே. அப்போதுதானே டி ஆர் பாலு கொஞ்சம் கூட திருடாமல் சாலை கப்பல் மந்திரியாக இருந்து சேது பாலத்தை நாசம் செய்தார், சாலைகள் போடும் கான்டராக்ட் எடுத்து வளம் கொழித்துக்கொண்டார்.

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      ஏதா இருந்தாலும் பங்கு தானாவே வந்துடும்.

  • R Hariharan - Hyderabad,இந்தியா

    நாங்குநேரி தொகுதி வாக்காளர்களே காங்கிரஸ் மீண்டும் இந்த தொகுதியில் நின்றால் டெபாசிட் இழக்க செய்யுங்கள். கட்சி தாவல் தடை சட்டம் மாதிரி பதவி தாவல் தடை சட்டம் ஒன்னு கொண்டுவாங்கய்யா. இல்லனா MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு MP பதவிக்கு நிற்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவாங்கய்யா.

  • jeans bala - CHENNAI,இந்தியா

    கண்டிப்பாக நாங்குநேரி தொகுதி aiadmk ஜெயித்து விடும்

  • LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா

    நாங்குநேரி தொகுதி வாக்காளர்களே காங்கிரஸ் மீண்டும் இந்த தொகுதியில் நின்றால் டெபாசிட் இழக்க செய்யுங்கள். கட்சி தாவல் தடை சட்டம் மாதிரி பதவி தாவல் தடை சட்டம் ஒன்னு கொண்டுவாங்கய்யா. இல்லனா MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு MP பதவிக்கு நிற்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவாங்கய்யா.

Advertisement