Advertisement

நிரவ் மோடியை அடைப்பதற்கு மும்பை சிறை தயார்!

மும்பை: வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, வைர வியாபாரி, நிரவ் மோடி, 48, ஐரோப்பிய நாடான பிரிட்டனின், லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டால், அவரை அடைப்பதற்கு, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறை, தயார் நிலையில் உள்ளது. வங்கிக் கடன் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர், விஜய் மல்லையா, லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டால், இருவரும், ஒரே அறையில் அடைக்கப்படுவர் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை தலைமையிடமாக வைத்து, வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர், நிரவ் மோடி. 'பஞ்சாப் நேஷனல் வங்கி'யில், வெளிநாட்டில் தொழில் செய்வதற்காக கடன் உத்தரவாதம் பெற்று, 13,600 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக, நிரவ் மோடி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதில் நடந்துள்ள பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை விசாரிக்கிறது.

முயற்சி:அவர் மீது, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 2018ல், அவன் வெளிநாடு தப்பிச் சென்றார். ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டனில், அவர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஸ்காட்லாந்து போலீசாரால், இந்தாண்டு, மார்ச் மாதம், அவன் லண்டனில் கைது செய்யப்பட்டான். ஜாமின் மறுக்கப்பட்டதால், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால், அவரை மஹாராஷ்டிர மாநிலம், மும்பை ஆர்தர் சாலையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்குள்ள வசதிகள் குறித்த அறிக்கையை அளிக்கும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. சிறையில் உள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி, சிறை நிர்வாகத்துக்கு, மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விரிவான அறிக்கையை, சிறை நிர்வாகம், மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.

திருப்தி:அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் குறித்து, சிறை நிர்வாக மூத்த அதிகாரிகள் கூறியதாவது: தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக, லண்டனில் வழக்கு நடந்தது. அப்போது, ஆர்தர் சாலை சிறையில் உள்ள வசதிகள் குறித்த விபரங்கள் கேட்கப்பட்டன. அது லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது; நீதிமன்றமும் திருப்தி தெரிவித்திருந்தது. தற்போது, நிரவ் மோடி தொடர்பான வழக்கு, வேகம் எடுத்துள்ளது. அதனால், தற்போது மீண்டும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால், அவர், 12ம் எண் சிறைச் சாலையில் அடைக்கப்படுவார். அங்கு இரண்டு அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில், தற்போது மூன்று பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். மற்றொரு அறை காலியாக உள்ளது. அந்த அறையில் தான், நிரவ் மோடி அடைக்கப்படுவார். 20 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்ட இந்த அறையில், மூன்று பேன்கள், ஐந்து டியூப் லைட்கள், இரண்டு ஜன்னல்கள் உள்ளன. நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் உள்ளது. மல்லையா நாடு கடத்தப்பட்டால், அவரும் இந்த அறையில் தான் அடைக்கப்படுவார்.

தரைவிரிப்பு:இந்த அறையில் அடைக்கப்பட்டால், நிரவ் மோடிக்கு, சர்வதேச சிறை விதிகளின்படி உரிய வசதிகள் கிடைக்கும். பஞ்சு மெத்தை, தலையணை, தரைவிரிப்பு, போர்வை வழங்கப்படும். ஒரு நாளில், அதிகபட்சம், ஒரு மணி நேரம், உடற்பயிற்சி, பொழுதுபோக்குக்காக சிறையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படும். சிறை வளாகத்தில் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி மற்றும் துணி துவைக்கும் வசதி ஆகியவை உள்ளன. இந்த சிறை வளாகத்தில் பணியாற்றும் போலீசார், சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். அதனால், துன்புறுத்துவது போன்றவை நடக்காது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  அட இனிமேல் மும்பை டூ டெல்லிக்கு டிக்கெட் போடவேண்டும்......இடையில் சென்னைக்கு எப்படி வருவது........தொகுதிக்கு .......வாய்ப்பு 2054 ல் கிடைக்குமா.....

 • Sridhar Rengarajan - Trichy,இந்தியா

  ஸ்விம்மிங் பூல் இருக்கா. அவரு என்ன நூறு இருநூறு பிக்பாகெட் அடிச்ச திருட்டு ... என்ன ?.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  ஏற்கனவே மல்லையாவுக்கு சிறை தயார்ன்னு போன வருஷமே தினமலர் ல செய்தி போட்டாங்களே. அது வேற சிறையா இல்லே அதை சிறையை மீண்டும் ரெடி பண்ணிட்டாங்களா?

 • Darmavan - Chennai,இந்தியா

  இங்கிலாந்து கோர்ட்டுகளும் ஏன் இவ்வளவு கால தாமதம் செய்கின்றன ....இதை பார்த்து காப்பி அடித்த நம் சட்டம் எப்படி இருக்கும்.....கேவலம் இந்நாடு கடத்தும் சட்டத்தை மோடி இன்னும் சுலபமாக்க வேண்டும் .இந்த எல்லா குற்றங்களுக்கும் காரணம் கேடுகெட்ட காங்கிரெஸ்ன் ஆட்சி .

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  யாரங்கே? நம் நீரவ் மோடிக்காக சிறப்பு வசதிகளுடன் (செவன் ஸ்டார்) குளு, குளு அறை ஸாரி சிறை தயாராகட்டும்.

Advertisement