Advertisement

இந்தியா வரியை குறைக்கணும்: டிரம்ப்

வாஷிங்டன் : "அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு விதிக்கப்படும் அதிக வரியை, இந்தியா குறைக்கணும்; ரத்து செய்ய வேண்டும்," என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், தனியார், 'டிவி'க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: அமெரிக்கா என்ற வங்கியை, கொள்ளையடிக்க அனைவரும் விரும்புகின்றனர், முயற்சிக்கின்றனர். அதனால் தான், மற்ற நாடுகளுடனான நம் வர்த்தக உறவில் பெரிய பற்றாக்குறை உள்ளது. இதுதான் நீண்ட காலமாக நடந்து வந்துள்ளது. இதற்கு முன், இது பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. ஆனால், என்னுடைய ஆட்சியின்போது, நாட்டை ஏமாற்ற மாட்டேன். இனியும் நாங்கள் முட்டாளாக இருக்க மாட்டோம்.

உதாரணத்துக்கு, இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய அருமையான நண்பர், பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார் தெரியுமா? நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு, 100 சதவீத வரி விதித்தார். அவருடன் தொலைபேசியில் பேசினேன். அதையடுத்து, இந்தாண்டு பிப்.,யில் அந்த வரி, 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், இதுவும் அதிகம் தான்; இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தியாவில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு, நாம் எந்த வரியும் விதிக்கவில்லை. அதே போல், நம் மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியை, இந்தியா குறைக்க வேண்டும்; முடிந்தவரை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக, அவர்கள் ஆலோசித்து வருகினறனர். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7 + 18)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அதெல்லாம் இதுக்கு மேலேயும் (50%) குறைக்க முடியாது , என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ அவ்வளவு தான்.

 • nicolethomson - bengalooru,இந்தியா

  இப்படி முன்னாடியே குறைச்சிருந்தாங்கன்னா தலைவரோட வாரிசு ஹம்மர் வாங்கி ஊழல்ல மாறியிருக்க மாட்டார் ?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இதுபோல நமது நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக பிரதமர் பேசினால் அவரை கார்பொரேட் கைக்கூலி என்பர். ஏற்றுமதியால் வரும் வரிவருமானம் வேலைவாய்ப்பு பற்றி யாருக்கும் கவலையில்லை

 • blocked user - blocked,மயோட்

  புல்லட் விலையை விட குறைவான விலையில் ஹார்ட்லி டேவிட்ஸன் பைக் கிடைக்கப்போகிறது...

 • Kunjumani - Chennai.,இந்தியா

  நீங்க மட்டும் வரியை ஏற்றுங்க, நாங்கள் ஏற்றினால் தவறா?

இந்தியா வரிக்குறைப்பு: ஏற்க டிரம்ப் மறுப்பு (18)

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  எம்பா புகழு இவ்வளவு நாகரீகம் கொண்ட நீங்கள் ஏன் இனியாவது திமுக ஊழல்,அராஜகம்,யோசடி,பாலியல் தொல்லை ஆகியவற்றில் ஈடுபடாது என சொல்லமுடியுமா??.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  ந்த வண்டீ வேகமா ஊர்ரூம் னு போயீ முட்டிரூம்

  • Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ

   இந்த வண்டீல அந்த வேலையும் பாக்கலாம்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  மோடி உள்நாட்டில் கவனம் செலுத்தணும் . ஊழல் அறவே ஒழிக்கணும் . இதெல்லாம் நடைமுறைக்கு வரும்போது உலகம் இந்தியாவை மதிக்கும் .

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அப்போ கூட்டாளி ஊழல்கட்சி அதிமுகவை ஒழிக்கணுமா ?

 • Muga Kannadi - chennai,இந்தியா

  சும்மா ஒரு லிட்டருக்கு 17 km கொடுக்கும். அமெரிக்காவால் குறைந்த விலைக்கு பெட்ரோல். இந்தியாவுக்கு வாங்கி தர முடியுமா? நாங்க இன்னும் வரி குறைக்கிறோம்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   லட்சம், லட்சமா குடுத்து வாங்குறவனுக்கு பெட்ரோல் விலை பெரிதில்லை.

 • J.Isaac - bangalore,இந்தியா

  Jaysankar sundaraman அவர்களே கிறுக்கனுக்கு என்ன தகுதி? நீங்க சொல்லுறதை கேட்கவில்லை என்றால் கிறுக்கனா ?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அதான் ஆளில்லா விமானம் ட்ரோன் வாங்கிக்கிறோம்னு சொல்லியாச்சே. அப்புறம் இன்னும் என்னா வேணும் ?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  எலே கிறுக்கு முதலில் உன்னுடைய ஹார்லி மோட்டார் சைக்கிள் விலை தெரியுமா உனக்கு???ரூ .5.33 லட்சம் (7246 US $ - ஒரு நல்ல புது கார் அங்கு 10,000 US $ ஆகவே அங்கே வேண்டுமானும் வாங்குவார்கள் ) முதல் ரூ.55.3 லட்சம் வரை (74,000 US $) ????இதை எந்த அடிமடையன் வாங்குவான்???ஒரு ஒரு ஒரு சாதாரணன் கூட இந்தியாவில் இதை வாங்க மாட்டான்?? வாங்குவது எல்லாமே காசு கோல்மாலாக சம்பாதிச்சவனுங்க தான் அவன் வெறும் ஸ்டேட்டசுக்கா வாங்குவதால் அவனுக்கு ஒரு கோடியோ ரெண்டு கோடியோ கவலை இல்லை. எவ்வளவு விற்பனை ஆகவேண்டுமா அவ்வளவு தான் விற்பனை ஆகும் அதில் 100% வரி ஆனால் என்ன 50% வரி ஆனால் என்ன??? ஏற்கனவே 3 லட்சம் பைக் விற்பனை செய்யமுடியாமல் தவிக்கின்றனர் இங்கே இந்தியாவில். சும்மா உளறாதே????

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   எந்தவிலையில் விற்றாலும் இந்தியாவில் வாங்குவதற்கு "போதிய" ஆட்கள் உள்ளனர்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அந்த வண்டிகளுக்கு 0% ஆக்கிட்டு, நம்ம TVS , ஸ்கூட்டி ..................க்கு 100 % ஆக்கிக்கலாம்.

 • Jayasankar Sundararaman - Chennai,இந்தியா

  கிறுக்கன் டிரம்ப்

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   ஒரு நாட்டின் அதிபரை வாய்க்கு வந்தபடி "கிறுக்கன்" என்றெல்லாம் எழுதுவது அநாகரிகம். அவரது நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கான வரியைக் குறைக்க சொல்பவர் எப்படி கிறுக்கன் ஆவார்? அவரது நாட்டு ஏற்றுமதி பெருக வேண்டும், அந்நிய செலாவணி கிடைக்க வேண்டும் என்பதால் வரியை மேலும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்திடுவது நாட்டுப் பற்று, கிறுக்குத்தனம் அல்ல.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   ஆஹா

 • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  டிரம்ப் கேட்டால் உடனடியாக ஆடம்பர பொருள்களுக்கு வரியை பாதியாக குறைப்பார்கள். சாதாரண மக்கள் உபயோகின்ற உணவு பொருள்களுக்கு ஒரு சதவீதம் குறைப்பதற்கு வருட கணக்காக யோசிப்பார்கள். வாழ்க ஜனநாயகம்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   பாதியை குறைத்ததாக செய்திகளில் வந்ததாக ஞாபகம் இல்லை. கப்பு சிப்புன்னு நடந்திருக்கனும்.

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  தன் நாட்டு பொருளாதார உயர பாடுபடும் உண்மையான தலைவர் டிரம்ப் ...

Advertisement