Advertisement

சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது

பெங்களூரு : ''சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில், தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, நன்னடத்தையின் படி, முன்கூட்டியே விடுதலை செய்யும்கேள்வியே எழாது,'' என, மூத்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வதந்தி:சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டு சிறை தண்டனையும், தலா, 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, 2017, பிப்ரவரி 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மூவரும்,2017, பிப்ரவரி 15ல், பெங்களூரு பரப்பனஅக்ர ஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், 2018, ஆகஸ்டில், சிறையில் சொகுசு வசதிகள் பெற, அதிகாரிகளுக்கு, 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, அப்போது சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா குற்றஞ்சாட்டியிருந்தார். 'சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் கொடுத்தது உண்மை தான்' என, கர்நாடக அரசு அமைத்த உயர்மட்ட விசாரணை கமிட்டியும், தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையே, யார் யார் லஞ்சம் கொடுத்தனர்; யார் பெற்றனர் என்பது பற்றி, ஏ.சி.பி., எனப்படும் கர்நாடக ஊழல் ஒழிப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

கேள்வியே எழாது:இந்நிலையில், 2019, பிப்ரவரி 14ம் தேதியுடன், சசிகலா சிறை தண்டனை அனுபவித்து, இரண்டாண்டுகள் முடிந்தன. இதற்கிடையில், 'நன்னடத்தை அடிப்படையில், ஓராண்டு முன் கூட்டியே, அவர் விடுவிக்கப்படலாம்' என, கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது.

இது குறித்து, கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிறை விதிகளின்படி, ஒரு பெண் குற்றவாளி, குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆண் குற்றவாளி, குறைந்த பட்சம், 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்திருந்தால், அத்தகையவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க, கவர்னரிடம் பரிந்துரைப்பதற்கு, மாநில அரசுக்கு அதிகாரமுண்டு' என்றனர்.

இது பற்றி, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, தினமலருக்கு அளித்த பேட்டி: குற்றவாளிகளை, நன்னடத்தையின்படி, அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே, விடுதலை செய்ய விதிமுறை உள்ளது. ஆனால், சசிகலா வழக்கை பொருத்த வரை, அந்த விதிமுறைக்குள் வராது. எனவே, தண்டனை காலத்துக்கு முன்னதாகவே, அவரை விடுவிக்கும் கேள்வியே எழாது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (41)

 • natarajan s - chennai,இந்தியா

  பொது வாழ்க்கையில் நன்னடத்தை இல்லை காரணத்தில் சிறைக்கு அனுப்பப்பட்டவருக்கு சிறையில் நன்னடத்தை காரணமாக remission . கேட்கவே புல்லரிக்கிறது. எதோ பஞ்சத்திற்கு திருடியவன் திருந்தலாம், இந்த ஜென்மங்கள் திருடுவதற்கே பிறந்தவர்கள் அவர்களுக்கு remorse என்பதே கிடையாது . வெளியில் விட்டால் தமிழகத்தை ( ஜெயா போல்) பழிவாங்க ஆக்ரோஷத்துடன் கொள்ளை அடிப்பார், அவரது அடிமைகள் காத்து கொண்டு இருக்கிறார்கள் கூட்டு கொள்ளைக்கு Ext பண்ணினால் நாட்டிற்கு நல்லது.

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  சசிகலா வெளியில்வந்து அஇஅதிமுக உடைந்து பின்னர் ஆட்சியை பிடிக்கலாம் என்ற ஊழல்தலைவரின் மகன் கனவு கானல் நீரே.......ஒரு எம்.எல்.ஏவைக்கூட கூப்பிட துப்பில்ல..........கருமம்......

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  தான் தகுந்த ஆவணங்கள் கொடுத்தால் தான் அது அந்த முறைப்படி நடக்கும்????ஆவணங்கள் என்பதை பணம் என்றும் படிக்கலாம் .

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  வெளிய உடுங்கப்பா .....

 • Asagh busagh - Munich,ஜெர்மனி

  இந்தியாவுல சிறை வாழ்க்க கடுமையா இருக்கிற மாதிரியும் அதனால சிற தண்டன பெற்றவர்களுக்கு ஏதோ மிகப்பெரிய மாற்றத்த உருவாக்கிற மாதிரியும் பல பேரு நம்பிகிட்டு திரியிறாங்கய்யா. எகனாமிக் கிரைம் மற்றும் ஊழல், சிறு குத்ததுக்கெல்லாம் சிறைக்கு அனுப்புறது நம்ம சட்டத்திட்டம் நிகழ்காலத்துக்கு போனியாகாத பழங்காலத்து மாடலாக பல்லிலுச்சு கிடைக்கிறத தான் படம் போட்டு காட்டுது. எங்க அடிச்சா வலிக்குமோ அங்க அடிக்கணும். சசியோட சொத்து மொத்தத்தையும் புடிங்கி குடியுரிமைய பறிச்சா அது சுடல, கனி, மாறன், கார்த்திஸ்ன்னு மத்த முடிச்சவுக்கிகளுக்கும் பாடமா அமையும். இந்த விசயத்துல ஒருவகையில பார்த்தா நம்ம அரசியல் தீவிரவாதிங்க ஒருத்தன ஒருத்தன் பாதுகாத்துக்கிறானுங்க.

Advertisement