Advertisement

மோடி விமானத்துக்கு பாக்., அரசு அனுமதி

லாகூர்: மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் நடக்கும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் தனது வான் எல்லை வழியாக செல்வதற்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.

இந்தாண்டு துவக்கத்தில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாக். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை நமது விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது. அதைத் தொடர்ந்து தனது வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு பாக். தடை விதித்தது.

இந்நிலையில் மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் 13 - 14ல் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவருடைய விமானம் பாகிஸ்தானின் வான் எல்லை வழியாக செல்ல மத்திய அரசு அனுமதி கோரியிருந்தது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை பாக். அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் விமானம் தங்களுடைய வான் எல்லை வழியாக செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் பாக். பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்கிறார். ஆனால் மாநாட்டின் இடையே இம்ரான் கானை பிரதமர் மோடி சந்திக்க மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8 + 33)

 • RajanRajan - kerala,இந்தியா

  இவனுங்க அனுமதி கொடுத்தாலும் இந்த பாக் வான் வெளி பயணத்தை மோடி தவிர்ப்பது நலம். இந்த பாக்கிகளை ஒருக்காலும் நம்ப முடியாது. அப்படி போவதென்றால் நம் விமானப்படை விமானங்களின் முழு பாதுகாப்புடன் பயணிப்பது உசிதம். WE SHOULD NEVER TAKE A CHANCE WITH THIS PAKISTAANI GOOSES.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  மோடி விமானத்துக்கு பாக்., அரசு அனுமதி கொடுக்கலாம். ஆனால் தமிழக வளர்ச்சி திட்டங்களுக்காக மோடிஜி வந்தால்,வெட்டிப்பேச்சு வைக்கோ கருப்பு கோடி காட்ட டுமீல் போராளிகளுடன் தயாராக இருக்கிறார். தமிழ் துரோகி.

 • blocked user - blocked,மயோட்

  எதற்கும் மூன்று இராணுவ ஜெட்க்களை பாதுகாப்புக்கு அனுப்புவது நல்லது.

 • Kunjumani - Chennai.,இந்தியா

  கூகிள் கம்பனியின் CEO சுந்தர் பிச்சை அவரது அலுவகத்தில் இருந்து வேலை செய்வது சாதாரண அலுவலர்களை விட மிகவும் குறைவாகத்தான் இருக்கும். அவருக்கு பிரைவேட் ஜெட் இறக்கும். அவர் அலுவல் நிமித்தமாக பல நாடுகளுக்கு செல்ல வேண்டியிருதால் அவரது தலைமையின் கீழ் வேலை செய்பவர்கள் அவர் ஊர் சுற்ற கிளம்பிவிட்டார் என்று நக்கலடிப்பதில்லை. நமது நாட்டின் CEO மோடிஜி அவர்கள், மோடிஜி வெளிநாட்டு செல்வது பிடிக்காதவர்கள் கம்பெனி மாறுவது போல வேறு நாட்டிற்கு செல்ல முயற்சிக்கலாமே. நமது அறிவு ஜீவி ஒருமுறை சொல்லவில்லையா நான் இந்த நாட்டை விட்டு சென்றுவிடுவேன் என்று.

  • எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா

   கார்ப்பரேட் அரசியல். சுந்தர் பிச்சையும் மோடியும் ஒன்றா?

 • ராமநாதன் நாகப்பன் -

  என்னது மோடியின் விமானமா? இது இந்திய அரசின் விமானம் என்பதை மறக்கடிக்கச் செய்யுமாறு செய்திகளை வெளியிடுவது மிகவும் தவறு. ‌ இந்திய பிரதமரின் விமானம் பாகிஸ்தான் உட்பட்ட வானில் பறக்க அனுமதி என்பதுதான் சரியானதாக இருக்கும்.

  • Abdul Rahman - Madurai

   மோடியே இந்தியா. இந்தியாவே மோடி. இரண்டும் வேறு வேறு அல்ல.

மோடி செல்லும் விமானம் பறக்க பாக்.அனுமதி (33)

 • oce - chennai,இந்தியா

  இம்ரான் கான் தீவிரவாதிகளை எச்சரித்துள்ளாரா.

 • ஆப்பு -

  இவுரே ரொம்ப நல்லவரு...அவுரு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவருன்னு காட்டிக்க வேணாமா?

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  என்ன ஒரு ஒற்றுமை .

 • sundarsvpr - chennai,இந்தியா

  பாகிஸ்தான் பொருளாராத ரீதியில் பின் தங்கியுள்ளது. உலக அரங்கில் நட்பு நாடுகள் குறைவு. சீனாவிற்கு அடுத்த வல்லரசு பாரதம். மோடி அரசில் மதஒற்றுமை எந்த பாதிப்பும் இல்லை. இதனால் பாகிஸ்தான் பாரதம் இடையே விரோதமனப்பான்மை குறைய வாய்ப்பு உள்ளது. மோடியின் வெற்றி பாகிஸ்தான் அரசை சிந்திக்கவைத்துள்ளது.

 • Arsath Ali - Malaysia,மலேஷியா

  பாகிஸ்தான் உதவி மோடிக்கு வேண்டும்.

  • Ramesh Rangarajan - DC,யூ.எஸ்.ஏ

   மோடியின் உதவிதான் பக்கிகளுக்கு வேண்டும். ஆனால் சிலர் எல்லாம் தலை கீழாய் யோசிக்கிறார்கள். அருமையான நாடு பக்கி அங்கே பச்சை அட்டை வாங்கி செட்டில் ஆகி விட வேண்டியதுதானே

 • Arsath Ali - Malaysia,மலேஷியா

  எதுக்கு பாகிஸ்தானிடம் அனுமதி கேக்க வேண்டும். மேக மூட்டமாக இருக்கும் போது போய் இருக்கலாம்

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   ஓ...அர்சத்து அலி.யா..?.நீ அப்டி தான் சொல்லுவே...

 • Rohin - jk ,இந்தியா

  அப்படி ஏதாவது அவர்கள் குள்ளநரித்தனம் அல்லது அயோக்கியத்தனம் செய்தால், ஒப்பற்ற தலைவன் மேதகு வாஜ்பாய் அவர்கள் சொன்னது போல் அடுத்து அரை மணி நேரத்தில் பாக்கிஸ்தான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருக்காது

 • Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  சூசை : மோடி எங்க வேணா போலாம் ஆன தமிழ் நாட்டில் மட்டும் வர முடியாது, வீர தமிழன்டா

  • RAJA.K - Doha,கத்தார்

   .தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கு.

 • Senthil kumar - coimbatore,இந்தியா

  என்னசெய்வது வேறுவழியில்லை அசந்தால் ஆப்பு வைத்துவிடுவார்கள் (இம்ரான் கானின் மைண்ட் வாய்ஸ்)

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  நாட்டை பங்கு பிரிக்கும் பொது இதையெல்லாம் யோசிக்காம தூக்கி குடுத்தது யாரு? விமானம் பறக்குறதுக்கு மட்டும் இல்ல.. இப்போ அரபு நாடுகளில் இருந்து எண்ணை குழாய் கொண்டு வர முடியல...

  • Sriramaprasad Balachandran - PUNE,இந்தியா

   Indians or Pakistanis were not decided the border. It was defined by British who were well known of “Divide and Rule” principal.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பாக் வழியாக பறக்க அனுமதி கேட்டது மிக பெரிய தவறு. பொது மக்களுக்காக திறக்கப்படாத வான் பகுதியை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும். அஜித் தோவல் அஜாக்கிரதையாக இருக்க கூடாது

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  நன்றி. பாராட்டுக்கள். இம்ரான் + மோடி காலத்தில் காஷ்மீருக்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும்.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  அப்படியே பாகிஸ்தானுக்கு ஒரு "சர்ப்ரைஸ் விசிட்" அடித்தாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை ... அதுவும் ராஜதந்திரம்

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   உனக்கேன் வயித்தெரிச்சல் ?

 • VELAN S - Chennai,இந்தியா

  பாக். வான் பகுதியை திறப்பது மூடுவது என்றால் என்னங்க அர்த்தம் , யாரவது தெரிந்தவங்க சொல்லுங்க , நன்றி

  • umapathy - vellore,தாய்லாந்து

   திரு velan, ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் அதன் வான் எல்லைகள் வரை அறுக்க பட்டு இருக்கும். அந்த வான் பரப்பில் அடுத்த நாடுகளின் விமானம் முதலியன பறக்க அனுமதிப்பது அந்த அந்த நாட்டின் விருப்பம். இது தவிர சர்வ தேச வான் வெளி உள்ளது. அதில் விருப்பம் போல யாரும் பறக்க முடியும்.

  • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

   வான் பகுதியை மூடுவது என்றால் ATC (AIr Traffic control ) உதவி இருக்காது . சிவிலியன் flights மானிட்டர் பண்ண ரேடார் கண்காணிப்பு இருக்காது விமானிகள் விமானத்தை பாதுகாப்பாக செலுத்த முடியாது. எதிர் எதிர் வான் மோதல்களுக்கு வாய்ப்பு அதிகம்.

  • Natarajan Mahalingam - CHENNAI,இந்தியா

   பாக் எல்லைக்குட்பட்ட வான் பகுதி என்பது - உங்கள் மற்றும் உங்கள் பக்கத்து வீட்டுக்கும் ஒரு எல்லைக் கோடு மாதிரி தான். அனுமதி பெற்று அதன் உள்ளே புகுந்து அடுத்த நாட்டிற்கு செல்ல வேண்டும். இதன் மூலம் நான்கு மணி நேரங்கள் மற்றும் பெட்ரோல் செலவு மிச்சம் ஆகும்.

  • cvgurubharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   இதுவே தமிழ்நாடா இருந்தா ஒருத்தர் தெர்மோகோல் போட்டு மூடிருப்பாரு

  • சிவம் - ,

   ஒரு நாட்டின் அனுமதி இன்றி அவர்கள் நாட்டின் மேல் வேற்று நாட்டு விமானம் பறந்தால் அதனை வேவு பார்க்கும் விமானம் என்று சுட்டு வீழ்த்திவிடும். ஆனால் பாகிஸ்தான் அனுமதி கொடுத்தாலும், நம் பிரதமர் அவர்கள் வான் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. பாக்கிகளை என்றுமே நம்ப முடியாது.

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   ஒவ்வொரு நாட்டின் எல்லைக்குட்பட்ட வான்வெளி அந்த நாட்டை சேர்ந்தது ...... அந்த வான்வெளியில் பறக்க (வானில் எந்த உயரத்திலும் சரி) அந்த நாட்டின் அனுமதி வேண்டும்.. இல்லையென்றால் அந்த நாட்டின் விமானப் படை அப்படிப் பறக்கும் விமானங்களை தரையிறக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்தும்... இப்படி விமானங்களை அவர்கள் நாட்டின் மேல் பறக்க அனுமதிப்பது வான் வெளியை திறப்பது.. பறக்க அனுமதிக்காதது வான் வெளியை மூடுவது.... அப்படி வான் வெளியை மூடினால், விமானங்கள் வேறு நாட்டின் மேல் வழியாக பறக்க நேரிடும்....... எரிபொருளும், நேரமும் அதிகமாகும் ..............

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  நடவடிக்கை எடுக்கப்பட்டது.....இனி திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது....தீவிரவாகளும் மனிதர்களே ....திருந்துவார்கள் என நம்புவோம்........திரூந்தவே மாட்டார்கள் என சொல்ல அவர்கள் ஊழல்திமுக கம்பெனி ஆட்கள் அல்லவே......

 • Sathya Dhara - chennai,இந்தியா

  மோதி அவர்கள் தீவிர வாதிகளையும் கட்டுக்குள் வைத்து ஒரு கட்டத்தில் அவர்களை மொத்தமாக அழித்து விடுவார் என்ற நம்பிக்கை வலுப்பெறுகிறது. இது முதல் கட்டமாக.....பாகிஸ்தான் இனி திருந்துமா என்று பார்க்கலாம்.

 • சிவம் -

  அவர்களிடம் எதற்காக அனுமதி கேட்க வேண்டும். நம் மோடிஜியின் பாதுகாப்பு கருதி மாற்றுவழியில் போவது தான் நல்லது.

  • raghavan - Srirangam, Trichy

   சரியாக சொன்னீர்கள், சீரும் சிங்கத்தை நம்பலாம்..குழைந்து வரும் குள்ள நரி கூட்டத்தை நம்பக்கூடாது..

 • சிவம் -

  அவர்களிடம் எதற்காக அனுமதி கேட்க வேண்டும். நம் மோடிஜியின் பாதுகாப்பு கருதி மாற்றுவழியில் போவது தான் நல்லது.

  • pandi -

   all this guy

Advertisement