Advertisement

தனி விமானம், புக் செய்து ஏமாந்த ஸ்டாலின்!

துண்டால் வியர்வையை ஒற்றியபடியே, பெஞ்சில் அமர்ந்த குப்பண்ணா, ''நாயரே, சூடா மோர் குடும்...'' என, கிண்டலாக கேட்டபடியே, ''என்னை கண்டபடிக்கு திட்டாதேள்னு, கும்பிடாத குறையா கேட்டிருக்கார் ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார்.
''யாரு வே அது...'' எனக் கேட்டார்,அண்ணாச்சி.
''தே.மு.தி.க., விழுப்புரம் மாவட்டச் செயலரா இருக்கறவர் வெங்கடேசன்... இவருக்கும், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷுக்கும் ஆகவே ஆகாது ஓய்... கள்ளக்குறிச்சியில போட்டியிட்ட சுதீஷுக்காக, தலைமைக்கு கட்டுப்பட்டு, வெங்கடேசன் தேர்தல் வேலை பார்த்தார்...
''ஆனாலும், சுதீஷ் வழக்கம் போல, தோத்து போயிட்டார் ஓய்... இதனால, அவரது ஆதரவாளர்கள், 'வெங்கடேசன், சரியா வேலை பார்க்கலை'ன்னு சமூக வலைதளங்கள்ல, பதிவுகளை போட்டுண்டு இருக்கா...
''இதுக்கு வெங்கடேசன், 'தயவு செஞ்சு, என்னை யாரும் விமர்சனம் பண்ண வேண்டாம்'னு பதில் பதிவு போட்டிருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''தேர்தல் சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''பெரும்பாலான கருத்துக் கணிப்புகள்ல, திருவள்ளூர் தனி தொகுதியில,
அ.தி.மு.க., தான் ஜெயிக்கும்னு வந்ததுங்க... இதனால, அங்க
போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் ஜெயகுமார், கடுப்புல இருந்தாருங்க...
''ஜெயகுமார் ஜெயிச்சதும், ஓட்டு எண்ணிக்கை நடந்த தனியார் கல்லுாரியில, அவரிடம் பேட்டி கேட்க, பத்திரிகையாளர்கள் குவிஞ்சாங்க... ஆனா, அவங்களை பார்த்து, காச்மூச்சுன்னு கத்திட்டாருங்க...
''அவரை, கட்சியினர் சமாதானப்படுத்த முயற்சி பண்ணியும், கேட்கவே இல்லை... 'பேட்டி தர மாட்டேன்'னு, வீம்பா திரும்பி போயிட்டாருங்க...'' என்றார்
அந்தோணிசாமி.
உடனே, ''தனி விமானத்தை, 'புக்' பண்ணிட்டு, ஏமாந்து போயிட்டாரு பா...'' என, கடைசி தகவலை கையில் எடுத்தார்,அன்வர்பாய்.
''யாரை சொல்றீங்ணா...'' எனக் கேட்டார் கோவை, கோவாலு.
''ஸ்டாலின் தான்... கருத்துக் கணிப்புகளை நம்பாம, 'மத்தியில நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்'னு உறுதியா நம்பிட்டு இருந்தாரு பா...
''ஆனா, மோடி சுனாமியில, காங்கிரசின் நிலைமை கவலைக்கிடமா மாறிடுச்சே... இதனால, தமிழகத்துல ஜெயிச்சும், அவரால, சந்தோஷத்தை கொண்டாட முடியலை பா...
''தேர்தல் முடிவுகள் வந்த அன்னைக்கே, டில்லிக்கு குடும்பத்தோட போக,
ஸ்டாலினுக்காக, அவரது மருமகன் சபரீசன், தனி விமானம் எல்லாம், புக் பண்ணி வச்சிருந்தார்... அப்புறமா, தனி விமானத்தை ரத்து பண்ணிட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
குளிர்ச்சியான மோரை நாயர் எடுத்து வர, குடித்து முடித்த பெரியவர்கள், பெஞ்சை காலி
செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • oce - tokyo,ஜப்பான்

  கொள்ளையடித்து சேர்த்த துட்டில் தெனாவெட்டு.

 • N.DURAI - trivandrum,இந்தியா

  தனி விமானத்தை பாகிஸ்தானுக்கு விட்டிருக்கலாம் அங்காவது அவருக்கு அமைதி கிடைக்கும்.

 • N.DURAI - trivandrum,இந்தியா

  தனி விமானம் ரத்து.. அஹஹா.. ஒரு பிளான்ல தான் இருந்துருக்காரு சொடலை.. ஆனா "கடவுள் இருக்கான் கொமாரு"

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  ஈழத்தில் இனம் அழிக்கபட்டுக்கொண்டிருக்கும் போது குடும்பத்தினருடன்தான் விரும்பிய பதவிகளை தன்குடும்ப உருப்பினர்களுக்குபெற்றுத்தர சக்கர நாற்காலியுடன் விமானத்தில் பறந்தவர் தான் அன்றைய திமுக தலைவர்

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  தனி விமானம் ரத்து.. அஹஹா.. ஒரு பிளான்ல தான் இருந்துருக்காரு சொடலை.. ஆனா "கடவுள் இருக்கான் கொமாரு"

Advertisement